பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கட்டுரைகள்

97

கையால் அளக்க வேண்டியதை வாயால் அளந்து களிப் படைபவன் பதர் ஆகின்றான்.

பயனற்ற ஒரு நாளைச் சங்கப் புலவர் ஒருவர் ‘பதடி வைகல்’ என்றார். பயனின்றிக் கழிந்த ஒரு நாளே பதடி வைகல் (பதர்நாள்) ஆகும்பொழுது பயனில்லாத சொற்களைப் பேசியே வா வாழ் நாளெல்லாம் கழிக்கும் ஒருவனை என்னென்பது? ‘மக்கட் பதடி எனல் தகும். வள்ளுவர்,

“பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்; மக்கட் பதடி எனல்”

என்கிறார்.