பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. சிறியர்க்கு அரியதும் பெரியர்க்கு எளியதும்

உ உலகந் தோன்றிய நாள் தொட்டே பிறப்பும் உளதாயிற்று. இறப்பும் உளதாயிற்று. மனிதன் உடைமையைத் திரட்டி வைக்கத் தொடங்கிய காலந் தொட்டே வாழ்வும் உளதாயிற்று; வறுமையும் உளதாயிற்று, பிறப்பு இறப்பு, வாழ்வு வறுமை ஆகிய இவை காலம், இடம், இனம், மொழி, நிறம் ஆகிய எல்லாவற்றையும் கடந்து நிலைப்பதாயிற்று. இவை இல்லா உலகம் வியப்புக்கு உரியதே அன்றி, உள்ள உலகம் வியப்புக்கு உரியதாய் இல்லை.

பிறப்புக்கு மனிதன் மகிழ்கிறான்; விழாவும் செய்கிறான்; எல்லோர் பிறப்புக்கும் இயற்கையாகவே மகிழ்ச்சி ஏற்படுவது உண்டு எனினும், வாழ்வோர் குடியில் பிறக்கும் பிறப்பிற்குத் தனிப் பெருமை உண்டு. மன்னவர் குடிப் பிறப்புக்கு நாடே விழாக் கோலம் பூணும் நற்பேறு உண்டு. ஆனால் எவர் இறப்புக்கும் விழாச் செய்வது இல்லை. இரங்கல் கூட்டம் நடத்துவது உண்டு. இதே போல் வாழ்வு கண்டு மகிழ்வதும், வறுமை கண்டு வருந்து வதும் எங்கும் காணற்கு உரியவே!

எல்லோர் பிறப்பும் மகிழ்வுக்கு உரியதா? எல்லோர் இறப்பும் துன்புக்கு உரியதா? எல்லோர் வாழ்வும் இன்புக்கு உரியதா? எல்லோர் வறுமையும் துன்புக்கு உரியதா? அவன் இருந்தால் என்ன? போனால் என்ன? என்று பிறர்கூற வாழ்வோர் இல்லையா? இருந்துங் கெடுத்தான் இறந்துங் கெடுத்தான் என ஏசப்படுவோர் இல்லையா? அவனுக்கு இத்தகைய வறுமையா? என்று ஏங்குமாறு வறுமையுறும் நல்லோன் இல்லையா? வனுக்கு இத்தகைய வாழ்வா? என்று வருந்துமாறு வாழும் பொல்லாதவன் இல்லையா?

சிலர் வாழ்வை வெறுக்கிறோம்; "இத் தீயவனும் வாழ் கிறானே" என வெதும்புகிறோம்; இவ்வஞ்சகனுக்கும் வாழ்வு அளிக்கிறானே இறைவன்”என நோகிறோம்: "இக் கொலைகாரனும் ஏமாற்றிப் பொய்ச்சான்றால் மெய்யன் ஆகித் தப்பி விட்டானே,