பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. படைகொண்டார் நெஞ்சு

பாலை நிலக் கொடுமையைப் பகர வேண்டியது இல்லை. காடும் மலையும் வளங்குன்றி வறண்டு பயனற்றுப் பாறையும் பொடியும் ஆகிக் காணப்பெறுவது பாலை. நிழலைக் காண்பதற்கே அரிதான அந் நிலத்தில் நீரைக் காண்டற்கு இயலுமா? நீரும் நிழலும் இல்லா நிலம்போல ஈரமும் ணக்கமும் இல்லா நெஞ்சமும் பாலைக்கு இயல்பு போலும்! காள்ளும் பொருள் ஏதும் இல்லாவிட்டாலும் துள்ளும் அழகு காண்பதற்காக வழியே வருவோரை வெட்டி வீழ்த்தும் கொடியவர்கள் பாலையில் உண்டு எனின் பாலையின் ஈரமிலாத் தன்மைக்கு வேறு சான்றும் வேண்டுமோ?

பாலை நிலமக்கள் மட்டும் அல்லர்! கையிலே எத்தகைய படைக் கருவிகளைக் கொண்டிருப்பவர்களுக்கும் இரக்கமின்மை படிப்படியாகப் படிந்து விடும் போலும்! படைக் கருவியைக் கண்டு கண்டு, பயன்படுத்திப் பயன்படுத்திப் பழகிப்போன மனம் அருள் என்னும் ஒரு பொருள் இருப்பதையே மறந்து விடும் போலும்! இரக்கமற்று மரத்துப்போன உள்ளத்திற்கும், விலங்குக்கும் என்ன வேற்றுமை? தான் வாழ எந்த ஒரு கொடுமை புரிதற்கும் அஞ்சாது விலங்கு விலங்குணர்வு! அந்நிலைமைக்கு ஆட்பட்ட ஆறறிவு உள்ளமும் விலங்கு உள்ளமேயாம்!

-

கீழான சொற்களைச் சொல்லிச் சொல்லித் திரிபவனுக்குத் தான் சொல்வது கீழ்மைச்சொல் என்பது தெரியாது. அது பழக்கமாகி விடுகின்றது; சொல்லின் பொருள் இன்னது, அதன் விளைவு இன்னது என்பது அறியாமலே போய்விடுகின்றது.

ம்

பசுக்கன்றுக்கு மலம் வெறுப்பு ஊட்டும்; பன்றிக்கு மலம் விருப்பாகவே இருக்கும்; பசுவின் இயல்பும் பழக்கமும் அத்தகையது; பன்றியின் இயல்பும் பழக்கமும் இத்தகையது; எனினும் இவ்வளவு வேற்றுமையுடைய பசுக்கன்றும் பன்றியுமே ஒன்றுபட்டு விடுமாமே! ஓருணர் வுடையனவாய் அமைந்து விடுமாமே! "பன்றியொடு சேர்ந்த கன்றும் மலந்தின்னும்”” என்னும் பழமொழி எதை உறுதி செய்கின்றது? தீய பழக்கத்தின்