பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

இளங்குமரனார் தமிழ்வளம் 9

உள்ளவன். இத்தகையவனுக்கு நாம் எண்ணும் எண்ணம் இன்னது, இத்தகையது என்பது புலப்படாமல் போகுமா? ஆதலால் பிறர் பொருளைக் கவர நினைப்பதும் கண்டு பிடிக்கப் பட்டுவிடும்! குற்றம் உடையது ஆகிவிடும். ஆகையால் களவு எண்ணத்தை விடுக" என்றனர் சிலர்.

வேறு சிலர், "களவு செய்ய எண்ணும் எண்ணத்தைப் பிறர் அறியமாட்டார் என அறியாமல் எண்ணுவது தவறு! எண்ணுபவர் நெஞ்சம் எண்ணத்தை நன்றாக அறியுமல்லவா! அந்நெஞ்சமே ஒருநாள்-ஒருநாள் என்ன—அப்பொழுதே- இடித்துக் காட்டாதா? நெஞ்சை ஒளித்தொரு வஞ்சகம் உண்டா? தன்னெஞ்சே தன்னைச் சுடும்" என்றனர். வேறு சிலர் "நெஞ்சில் இருப்பதைப் பிறர் அறியமுடியாது என நினைத்தால் தவறாம்; நெஞ்சின் நினைவு சிறிதும் மாறாமல் மறையாமல் முகத்தில் தெளிவாகி விடுமே! கண்ணில் காட்டி விடுமே” என் மடக்கினர். இன்னுஞ் சிலர் “வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் ருப்பான்! ஆதலால் வஞ்சிக்க நினைக்கும் மதியிலியே! உன்னை வஞ்சிக்க ஒருவருமில்லை என்று நினைக்காதே!” என்றனர்.

66

ன்று

கடவுளுக்கும் நெஞ்சுக்கும் அஞ்சாமல் காரியம் ஆற்றும் ஆட்கள் நாட்டில் இருக்கத்தானே செய்கிறார்கள். அவர்கள் இக்காலம் இல்லையா?-முற்காலத்து இருந்தது இல்லையா? த்தகையவர்களுக்காகக், 'களவுக்குப் பெருந்தண்டனை உண்டு! களவு செய்பவன் இவ்வுலகில் கொடிய நோய்களுக்கு ஆட்படுவான். அவன் மகன் வறுமையில் சிக்கித் தவிப்பான். இவன் கூட்டமே நரகத்திற்குப் போய்ப் படாப் பாடுகள் படும்” என்று உரைத்தனர். இதற்கும் அஞ்சாதவர்களை என்ன செய்வது?

ஊர்ப் பெரியவர்கள் கூடிக் குற்றம் புரிந்தவனைக் கசையால் அடித்தும், காறியுமிழ்ந்தும், கழுதைமேல் ஏற்றி ஊரைச் சுற்றி வரச்செய்தும், கோவிலுக்கு விளக்கிட வைத்தும், இவ்வளவு பணம் அபராதம் (ஒறுப்பு) என்று விதித்தும், ஊரைவிட்டு விரட்டியும்-இத்தகைய தண்டனைகளெல்லாம் வழங்கினர். இந்நாளில் அப்பணியை நீதிமன்றங்களும், காவல் நிலையங்களும், சிறைக் கூடங்களும், கொலைக் களங்களும் ஆற்றுகின்றன.

இவ்வளவு இருந்தும் களவு ஒழிந்து விட்டதா? செல்வம் உள்ளோரும் இல்லை; இல்லோரும் இல்லை; எல்லோருக்கும் ஒப்பான அளவில் உண்டு; என்னும் நாடுகளிலும் ஒவ்வோர்