பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

இளங்குமரனார் தமிழ்வளம் - 9

பற்றி ஒரு செய்தி: அவர் உயர்ந்த மொழிப் பற்றாளர். அவர் காணும் நூல்களில் எந்த வொரு பிழை வரக் கண்டாலும் வெதும்புவார், மொழிக் கொலையைக் கண்டு கண்டு நைவார். அந்நைவு சினமாகக் கிளம்பும். அவ் வேளையில் எல்லாம் தம் உணர்ச்சியை அடக்குவதற்காகத் தம் எழுத்தாணியை எடுத்துத் தம் தலையிலே குத்திக் கொள்வார், இந்தப் பிழையைப் பார்க்கப் நேர்ந்ததே என்று. பிழை செய்தவர்களைத் தண்டிப்பதற்குப் பதில், பிழையைப் பார்க்க நேர்ந்த குற்றத்திற்காகத் தம்மைத் தண்டித்துக் கொண்ட பெருமை சாத்தனார்க்கு இயல்பாயிற்று. மொழியிற் பிழை செய்த புலவர்களைத் தலையில் குட்டு வைத்த பிள்ளைப் பாண்டியனையும், குறும்பி அளவாகக் காதைக் குடைந்து எட்டின மட்டும் அறுத்த வில்லியையும் ஒன்றிரண்டாகப் புலவர்கள் குடுமியை முடித்து வெட்டி விட்டு ஓட்டிய ஓட்டக் கூத்தனையும் பற்றிய செய்திகளை அறிந்து, அதே கண்ணோட்டத்தில் சாத்தனார் சால்பையும் நோக்க வேண்டும். எத்துணை இடைவெளி?

உந்தி எழும்பும் கோபத்தைத் தடுப்பதற்குக் கெய்சர் என்னும் வேந்தன் ஒரு வழியைக் கொண்டிருந்தான். தனக்குக் கோபம் வருகின்றது என்றால் உடனே தன் காதைப் பிடித்துத் திருகிக்கொள்வான்; பிறரைத் திருகிக் கோபத்தைப் பாவமாக மாற்றுவதைப் பார்க்கிலும் தன்னைத் திருகி அடக்க முடையவன் ஆவது நலம் என்பது அவன் தெளிவு! சீத்தலைச் சாத்தனார் பரம்பரை என்று சொல்லலாம்போல் இல்லையா?

நாடாளும் மன்னவரும் நாவல்ல புலவர்களும்,ஆன்றோர்களும் சான்றோர்களும் சினத்திற்கு அஞ்சி, வெளிவரா வண்ணம் காக்க விரும்பினார்களே! காரணம் என்ன? “சினத்தைப் பொருள் என்று கருதி வாழ்ந்தவன் உறுதியாக அழிவான். நிலத்தில் அறைந்தவன் கைதவறாது படுவது போலச், சினங்கொண்டவனும் பட்டழிவான். அன்றியும் சினத்தை வளர்த்துவிட்டவர்கள் உயிருடையவர்கள் என்று பெரியோர்களால் கருதப்பட மாட்டார்கள். இறந்தவர்களாகவே எண்ணப்படுவர். சினத்தைத் துறந்தவர்களே உண்மைத் துறவிகள். பிறரல்லர்!" இத்தகைய தெளிவு அவர்களுக்கு ஏற்பட்டு விட்டமைதான் கோபத்தை வெறுக்கக் காரணமாயிற்று.

இங்குக் காட்டியவற்றால் நாம் கொள்ளக் கிடப்பது என்ன? உண்டி, உடைகளால் ஒருவன் தன்னைக் காத்துவிட