பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

இளங்குமரனார் தமிழ்வளம் - 9

ல்லையா? பிறரிடம்காணப்பெறாத திறம் உடையவர், பிறரால் செய்ய இயலாததைச் செய்தவர் உலகில் நிலைத்தனர்! அவர்களே, அழிந்தொழியும் இழியுடலை, அழியாப் புகழுடல் ஆக்கிய உரவோர்கள் ஆயினர்! மலைதேடி வனந்தேடி வான்தேடி ஓட வேண்டாத ‘காய கற்பம்’ ஈதே!

-

எளிய நடையில் அரிய கருத்துக்களை எத்துணை இனிய முறையில் கூறுகிறார் அரசப் புலவர் அதிவீரராம பாண்டியர். சல்வம் நிலையாமை பற்றி அச்செல்வ வேந்தன் கூறுவது வியப்பே.

“உடைமையும் வறுமையும் ஒருவழி நில்லா" "குடைநிழல் இருந்து குஞ்சரம் ஊர்ந்தோர் நடைமெலிந் தோரூர் நண்ணினும் நண்ணுவர்” "குன்றத் தனைய இருநிதி படைத்தோர் அன்றைப் பகலே அழியினும் அழிவர்"

“எழுநிலை மாடம் கால்சாய்ந் துக்குக் கழுதை மேய்பாழ் ஆயினும் ஆகும்” வை போதாவா?

வள்ளல் அதியமான் கட்டிக்காத்த கோட்டை அதியமான் கோட்டையாக இருந்தது.இன்றோ, அதமன் கோட்டைப் பெயரொடும் சிதைந்து கிடக்கிறது! உத்தமன் அதியமான் எங்கே? இவ்வதமன் எங்கே? என்றாலும், ஔவையார் என்றும் அழியாக் கோட்டையும் அரணும் கட்டிக்காத்துவிட்டார் ல்லையா தம் பாட்டுத் திறத்தால்!

-

வள்ளல் பச்சையப்பரும், அண்ணாமலை அரசரும் அழகப் பரும் போன்ற செல்வர்கள் நாட்டில் இல்லையா? அவர்களுக்கு ணையான அறிஞர்கள் இல்லையா? இருந்தார்கள்! இருக்கிறார்கள்! இருந்தாலும் இவர்களைப்போல் செல்வமும் அறிவும் சேர வாய்த்தவர்களும் செத்தொழிய மக்கள் எண்ணத்திலிருந்து மறைந்துபோக -இவர்கள்மட்டும் ஏன் சாவா உடம்பு கொண்டு திகழ்கின்றனர்? ஒரே ஒரு நல்வழி கண்டு விட்டதனால்தானே! அழியும் செல்வத்தைக்கொண்டே அழியா வாழ்வு பெறும் வித்தையைத் தெரிந்துகொண்டதே அது!