பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கட்டுரைகள்

நிலைக்குமாறு செய்யும் செயல்கள் எவை?

167

கல்விக் கூடங்கள் அமைத்தல், மருத்துவ நிலையங்கள் நடாத்துதல், இளைஞர், முதியர், ஆதரவற்றோர், ஆதரவு நிலையங்கள் நிறுவுதல், புதிய புதிய தொழிற்சாலைகள் நிறுவி வேலை வாய்ப்புச் செய்தல், வேலைக்குத்தக்க கூலி தருதல், நேரிய வணிகத்தில் பொருளை முடக்கிப் பொது நலங் கருதிப் பண்ட மாற்றுச் செய்தல், பூங்காக்கள், விளையாட்டு அரங்கங்கள், கலைக்கூடங்கள், ஓய்வு மன்றங்கள், நூலகங்கள் ஏற்படுத்துதல், ஊர்ப்பொது, நகர்ப் பொதுமன்றங்கள் அமைத்தல் ஆகியன குறிப்பிடத் தக்கன. இவை போல்வன பிறவும் உள.

66

"அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் அற்குப ஆங்கே செயல்”

நிலைத்து நிற்காத தன்மையுடையது செல்வம். இத்தகைய செல்வத்தை ஒருவன் கைவரப் பெறுவானானால் உடனே நிலையான காரியத்தைச் செய்துவிட வேண்டும். ஏனெனில் நிலைத்து அவனிடம் நிற்பது ஐயம்! ஒரு வேளை நில்லாது போகிவிட்டால் மீண்டு அவனிடம் வருமா என்பது அதனினும்

ஐயம்!