பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கட்டுரைகள்

171

சிக்கவும் நேர்ந்து விடுகிறது. விளைவு என்ன? குற்றக் கூண்டு ஏறுதல், சிறைக் கூடம் செல்லுதல், ஒறுப்புத் தொகை கட்டுதல் இப்படியாகின்றது. என்றாலும் தம் பழக்கத்தை விடுகின்றனரா? மறந்துவிடுகின்றனர்! எதை? குடியை-சூதை அன்று!தண்டனைகளைத் தான் மறந்து விடுகின்றனர்.

தண்டனைகளை மறந்து; மரத்துப்போன உள்ளம் உயிர் அன்ன மானத்திற்கும் மரத்துப் போய்விடுகின்றது. அடுத்தவர்கள் இழிவாக நினைப்பார்களே. நான்கு பேர்களின் முன் தலை நிமிர்ந்து நடமாட முடியாதே என்றெல்லாம் நினைப்பது இல்லை. அற்பமான பற்று எத்தகைய நல்ல பண்புகளையெல்லாமோ கொன்று விடுகின்றது!

புகை பிடிக்காதவர்களுக்கு, அது எவ்வளவு நாற்றமாக இருக்கிறது! பிறர் ஊதிவிடும் புகை மூக்கின் பக்கம் வரும்போதே அருவருப்பும், குமட்டலும் ஏற்பட்டு விடுகின்றது. இருந்தாலும் குடித்துப் பழகியவர்களுக்கு அது எவ்வளவு நறுமணமும், இன்சுவையும் ஊட்டுவதாகக் கருதாவிட்டால் விடாப்பிடியாகப் பற்றிக்கொண்டு இருப்பார்களா? இதயத்தை அரிக்கும் காச நோய்க்கு ஆட்பட்டு இருப்பவர்களும் - புகையாலே தமக்கு அந்நோய் வரக் கண்டிருந்தும் - அதனை விட்டுத் தொலைப்பது ல்லையே! குடித்துக் குடித்து உயிரையாவது விடுவேனே

முதி