பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கட்டுரைகள்

175

பொருள்களின் ஆசையை உதறினார்; அழியாப் பொருள்களின் மீது ஆர்வத்தைச் செலுத்தி, இப்புலவர் பெருமகனார் கடுவன் இளவெயினனார் என்னும் பெயருடையவர் ஆவர்!

மதுவை ஒழிக்கச் சட்டம் உண்டாக்கிய அரசு என்ன செய்தது. வீடுதோறும் பாலும், காபியும், டீயும் கொடுக்கத் தலைப்பட்டது; ஒரு பற்றைத் தொலைக்க மற்றொரு பற்றில் ஊன்றினால் அன்றி இயலாது என்பதை இது காட்டும். நல்லதில் பொழுதைச் செலுத்தத் தொடங்கினால் கெட்டது தொலை தூரம் ஓட்டம் பிடிக்கும்! பருந்து வட்டமிட்டுப் பறக்கும் இடத்தே கோழியும் குஞ்சும் பதுங்கி விடுவது இல்லையா? வலியவர் ஆட்சி செய்தால் மெலியவர் தாமே அடங்கி விடுவர்.

போலியான பற்று ஒழிய, வேறு பற்றுகளும் உள. அவையும் துன்பம் தருவனவேயாம்: எந்த ஒன்றில் ஆசை கொண்டாலும் துன்பமே என்பதில் ஐயமில்லை. எனினும் பிறர் நலங்கருதி நாம் துன்பப்பட்டாலும் குற்றமில்லை என்ற காரணத்தால் நல்ல பற்றுகளை நாளும் கடைப்பிடிக்க வேண்டும்; கடைப்பிடித்தலை பெரியவர்கள் வரலாறும் வலியுறுத்துகின்றன.

சாதிப்பற்று, மதப்பற்று இவையும் துன்புறுத்துவனவே! உலகுக்கும் கேடு செய்வனவே. இப்பற்றுகள் கெடுதலாயின் இன்பம் உண்டு. அதனைக் கெடுக்க, உலகெல்லாம் ஒன்றெனக் கருதும் தாயுள்ளம் தூயவுள்ளம் வேண்டும். அதற்கு முழு முதலாம் இறையன்பு வேண்டும். தன்பற்றைக் குடிப்பற்றும், குலப்பற்றும் ஒழிக்கும்; குலப்பற்றையும் மதப்பற்று ஒழிக்கும்; மதப்பற்றையும் பெருகி முதிர்ந்த இறைப்பற்று ஒழிக்கும்; இறைவனோடு ஒன்றும் நிலைமை ஒன்று ஏற்படக்கூடிய காலத்தில் இறைப்பற்று ஒழியும். இதனைத்தான், திருமூலர்,

66

‘ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள் ஆசை விடவிட ஆனந்த மாமே”

என்று இனிதுற இயம்புவர். அவரே,

“ஆசையும் அன்பும் அறுமின்; அறுத்தபின் ஈசன் இருந்த இடம்எளி தாமே'

என்றும் கூறுவர்.