பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

இளங்குமரனார் தமிழ்வளம் - 9

கணையின் தோற்றத்திற்கும், அதன் வன்கொடுமைக்கும் எவ்வளவு இடைவெளி? யாழின் தோற்றத்திற்கும் அதன் இன்னிசைக்கும் எவ்வளவு வேற்றுமை? தோற்றத்தைக் கண்டு மட்டும் ஒரு முடிவுக்கு வந்தால் புகழ் எதற்கு? பழி எதற்கு? அழகு எதற்கு? அழகின்மை எதற்கு?

தோற்றத்திற்கு முதன்மையா? தொழிலுக்கு முதன்மையா? தோற்றம் வேண்டுவது தான்!

அதனினும் சிறப்பாக வேண்டுவது தொழிலே! ஒன்றன் தோற்றத்தைக் கொண்டு மதிப்பிடுவது தவறு. அதன் தொழிலைக் கொண்டு மதிப்பிடுவதே முறைமை. வேண்டுமானால் தொழிலுடன் தோற்றமும் சேர்ந்து இருக்கட்டும்; மிகமிகப் பாராட்டலாம். தோற்றம் தொழில் ஆய இரண்டினுள் ஒன்றைக் கொண்டு மதிப்பிட வேண்டுமானால் அந்த ஒன்று தொழிலாகவே இருக்கவேண்டும்; தோற்றமாக இருக்க முடியாது; இருக்கவும்

கூடாது.

தங்கக் கடை ஒன்று; அதற்குள் மங்கையர் இருவர் புகுந்தனர்; க்கால அணிகலங்களாக பூச்சுகளாக எவை எவை உண்டோ அவ்வளவும் அம்மங்கையரிடம் இருந்தன. அவர்கள் தோற்றப் பொலிவும், நாகரிக முதிர்வும், செல்வச் சிறப்பும் பேச்சின் திறமும் அவர்களை மிகமிகச் செல்வராகக் காட்டின. கடைப் பணியாள் விதவிதமான சங்கிலிகள், வளையல்கள், தோடுகள் எடுத்து டுத்துக் காட்டினான். நூற்றுக்கணக்கான எண்ணிக்கைகளை மாற்றி மாற்றிப் பார்த்தனர். பத்துப் பதினைந்து பொருள்களைப் பொறுக்கி எடுத்தனர். எடுத்ததை நிறுக்கச் சொல்லாமல் தாங்கள் கொண்டு வந்திருந்த தோல் பைகளிலே போட்டனர்.

66

'அம்மா! அவற்றைக் கீழே வையுங்கள். நிறுக்க வேண்டும் என்றான் பணியாள்.