பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கட்டுரைகள்

183

சென்று அன்புக்காட்டி தழுவ முடியுமா? எவையும் இல்லை. அச்சத்தையும் அழிவையும் நொடிதோறும் எதிர்நோக்கிச் செய்ததே மீதம்; வேறொன்றும் இல்லை. கெட்ட குணம் உடையவற்றை வளர்ப்பவன் அவற்றின் கேடுகளுக்கு இரையாகப் போகின்றான்: நல்லவற்றை வளர்த்தவன் அவற்றின் நன்மையை அனுபவிக்கிறான்! இவற்றில் இருந்து தப்பமுடியாது.

இதுபோலவே நற்பண்புகளை வளர்ப்பவன் நன்மைக்கு மாக இருக்கின்றான்.தீய பண்புகளை வளர்ப்பவன் தீமைக்கு இடமாகவே இருக்கின்றான்! வளர்க்கும் ஒன்று அவனை விடுத்து அகலுமா? வளர்க்கப்படும் நாய் வளர்ப்பவனைக்கண்டு வாலாட்டி மகிழ்வது காண்பது தானே!

குழந்தையும் தெய்வமும் கொண்டு அணைத்த இடம் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். தெய்வத்தை நினைந்து போற்றிப் புகழ்ந்து வழிபட்டவர்களுக்குத் தெய்வ அருள் கிடைக்கவே செய்கின்றது; அமைதி மழை பொழிந்து இன்பப் பயிரை வளர்க்கவே செய்கின்றது தெய்வ அருள்! குழந்தையும் அவ்வாறே கொஞ்சி வளர்க்கின்றோர் இடத்துக்குழைந்து விளையாடி இன்பம் நல்குகின்றது. தந்தை, பிள்ளையை எடுத்து வைத்து இருக்கும் வேளையில் தாய் அவ்விடம் வந்தால், பிள்ளை தாயை நோக்கித் தாவிச் செல்கின்றது; தடுத்தாலும்