பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கட்டுரைகள்

193

அனைவராலும் ஊழைக் கடக்க இயலுமா? இயல்வது இல்லை! இயலுமென்றால் நினைத்தன அனைத்தும் நடந்தே ஆகவேண்டும். ஒன்றை நினைக்கின் அது ஒழிந்து ஒன்று ஆவதும், ஒன்றை நினையாது இருக்க அது முன் வந்து நிற்பதும்காண்கிறோமே! உலகெல்லாம் என் ஒரு குடைக் கீழ்க்கொண்டு வருவேன் என்று முனைந்து நின்றவர்களுக்கும் முடியவில்லையே! சிலச்சில வெற்றிகள்! சிலச்சில வாய்ப்புகள்! அவ்வளவே! அவ்வளவு ஆற்றல் கிளர்ந்ததும், வளர்ந்ததும், முடியாமல் தளர்ந்ததும் ஊழாலேயே! வாழ வைக்கும் ஓர் ஊழ்! தாழவைக்கும் ஓர் ஊழ்! அனுபவிக்க வைக்கும் ஓர் ஊழ்! அனுபவிப்பதைத் தடுத்து வைக்கும் ஓர் ஊழ்! அவ்வவற்றின் வேலையை அவ்வவை செய்யவேண்டிய நேரத்தில், செய்ய வேண்டிய விதத்தில் செய்தே தீரும். இதனைக் கடப்பது எளிதோ? இணையிலா ஊக்கமும் உறுதியும் உழைப்பும் உடையவர்க்கே முடியும்!

புத்தர் பிறந்த வேளையிலே புகுந்த பெரியோர்கள் “உலக முழுமையும் ஆளும் வேந்தனாவான் இவன்! இல்லையேல் உலகம் போற்றும் துறவியாகாமல் இருக்க வேண்டுமானால் எத்தகைய சிறிய துன்ப நிகழ்ச்சியையும் இவன் காணுதல் கூடாது” என்றனர்.

புத்தரின் தந்தையான சுத்தோதனர், கபிலவத்து நாட்டு மன்னர். மகனை, மன்னர்மன்னன் ஆக்க விரும்பினவர். எல்லா வற்றையும் துறந்து, தம் மகன் திருவோடு கொண்டு பிச்சைக் கோலத்துடன் சென்றுவிடுவதை விரும்புவாரோ? துன்ப நிகழ்ச்சிகளைக் காணாமல் இருக்க அன்று, கேளாமல் இருக்கவும் வழி வகைகள் செய்து வந்தார். இனிய சூழல் அமைந்த மாளிகையை விடுத்து வெளிச் செல்லா வண்ணம் காத்தார். ஆடல், பாடல் நிகழ்ச்சிகளின் இடையே பெரிதும் பொழுதினைக் கழிக்க வாய்ப்புக் கண்டார். என்ன ஆயிற்று!

விழாப் பொழுதில் ஊர்வலம் வரவிழைகின்றார் புத்தர். தடுக்கின்றார் சுத்தோதனர்; முடியவில்லை! இன்ப விழாவின் இடையிலே, பிணத்தைக் காண நேர்கின்றது; முதுமைத் துயரைக் காண நேர்கின்றது; நோய்த்துயரை நோக்க நேர்கின்றது! உலகமே துன்பப் போர்வையால் போர்த்தப்பட்ட காட்சியை வழங்கிக் கலங்கச் செய்கின்றது புத்தரை! வானில் பறந்து செல்லும் அன்னத்தை அம்பால் அடிக்கிறான் புத்தரின் உறவினனும் நண்பனுமான தேவதத்தன் அவ்வன்னம் வேறெங்கும் விழக் கூடாதோ? இரத்தம் வழிந்தோ, புத்தர் உறையும் மாளிகைச்