பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கட்டுரைகள்

195

இவ்வளவும் கேட்டறிந்த ஒருவனுக்கு என்ன தோன்றும்? ஊழ் என ஒன்று உண்டு. அதனை எவ்வாறு முயன்றாலும் வெற்றிகொள்ள முடியாது என்று உறுதிசெய்யப் பெற்றுள்ள ஒன்றனுடன் எதிரிடுவானேன். "நடப்பது நடக்கட்டும்; நடக்கும் விதத்திலே நடக்கும்" என்று சோர்ந்துவிடுவர். சோர்ந்து விடுவதற்கோ 'ஊழ்' அதிகாரம் வகுக்கப்பட்டது. சோர்ந்து விடுவது வள்ளுவர் கருத்துக்கு முரண்பட்டது மட்டுமன்றி, அவனுடைய ஆற்றலுக்கும், அறிவுடைமைக்கும், முயற்சிக்கும் சிறப்பு ஆகாது! இயன்ற அளவு முயன்று பார்க்க வேண்டும். முயற்சிக்குப் பயன் இல்லையாயின் ஊழ் என ஓய்வதில் - அமைதி கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை. முயற்சியளவுக்குக் கூலியுண்டு என்பது வள்ளுவர் கருத்து. அதனைத்

"தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்’

என்னும் ஊக்கமுறுத்தும் குறள்மணி வலியுறுத்தும்.

6

காட்டும்வழி இருவர் செல்கின்றனர்; புலி ஒன்று குறுக்கிடுகின்றது. ஒருவர் கடவுளே நீர்தான் காப்பாற்ற வேண்டும்' என்று சோர்ந்துவிடுகிறார். மற்றொருவர், நம்மால் முடிந்த அளவு எதிர்த்துத் தாக்கவோ தப்பிச் செல்லவோ முயல்வோம்! முடியாது போனால் கடவுள் மேல் பாரத்தைப் போடுவோம்' என்று ஊக்கப்படுத்தினார். முயற்சி இல்லாமல் கடவுள் மேல் பாரத்தைப் போட்டுவிட்டுத் தலைமேல் கை வைத்துச் சோர்ந்து விடுவது கையாலாகாத்தனம் என்பது அவர் கருத்து. இந்த அளவில் தான் ஊழையும் எண்ணவேண்டும்.

ஒரு வீர வேந்தன் சொல்கின்றான் “என் குதிரை மேல், தன்னம்பிக்கையை நினைத்து ஒரு காலையும் கடவுளை நினைத்து ஒரு காலையும் எடுத்து வைப்பேன்" இதனை நினைக்க வேண்டும்! மனிதன் சோர்ந்து மடிவதற்காக ஊழ் உரைக்கப்பட வில்லை; ஊக்கம் ஊக்கம் கொண்டு ஊழை ஊழை வெல்ல வேண்டும் என்பதற்காக மாட்டும் சாட்டையடியே அது!

ஊழ் வலியது ஆகலாம்; வெல்ல முடியாது அமையலாம்; வித விதமாகத் தோன்றி வருத்தலாம் என்றாலும் ஊழை வென்றவர்களும் உளர்; ஊழுக்குத் தோற்றவர்களும் உளர். ஒவ்வொரு வாரு சான்று காணலாம்.

மலை போன்ற செல்வக் குவியல் உடைய கோவலன், சிலம்பையே முதற் பொருளாகக் கொண்டு வணிகம் செய்வதற்குப்