பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. உலகு புகழ் உயர்நூல்

புகழ் வாய்ந்த தமிழர்

“உலலகத்திலுள்ள ஜாதியார்களிலே ஹிந்து ஜாதி அறிவுத் திறமையில் மேம்பட்டது. இந்த ஹிந்து ஜாதிக்குத் தமிழராகிய நாம் சிகரம்போல் விளங்குகிறோம்; எனக்கு நாலைந்து பாஷைகளிலே பழக்கமுண்டு. இவற்றிலே தமிழைப் போல வலிமையும் திறமையும் உள்ளத் தொடர்பும் உடைய பாஷை வேறொன்றுமேயில்லை.

"இந்த நிமிஷம் தமிழ் ஜாதியின் அறிவு கீர்த்தி வெளி உலகத்திலே பரவாமல் இருப்பதை நான் அறிவேன். போன நிமிஷம் தமிழ் ஜாதியின் அறிவொளி சற்றே மங்கியிருந்ததையும் நானறிவேன்; ஆனால் போன நிமிஷம் போய்த் தொலைந்தது. இந்த நிமிஷம் ஸத்யமில்லை; நாளை வரப்போவது ஸத்யம். மிகவும் விரைவிலே தமிழின் ஒளி உலக முழுவதிலும் பரவா விட்டால் என் பெயரை மாற்றி அழையுங்கள்” இவ்வுரை மணிகள் பாரதியார் எழுதியவை. தமிழன் புகழ் பாரெல்லாம் பரவும் என்பதில் எவ்வளவு உறுதி கொண்டிருக்கிறார் அவர். தாம் கொண்டிருக்கும் உறுதிக்குக் காரணம் காட்டாமலா

சென்றுவிட்டார்?

வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

என்பது, அவர் கண்டறிந்து காட்டியுள்ள காரணம்!

"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்" என வேண்டினார். "இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்” என்று மன்றாடினார். "மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை” என்று இடித்துரைத்தார்! "திறமான புலமையெனில் வெளி நாட்டோர் அதை வணக்கம் செய்தல் வேண்டும்" என்று உலகு புகழ் வேட்கை நிலையை வெளியிட்டார்.