பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கட்டுரைகள்

203

மனத்தகத்து அடக்கி, அசையாக ஆராய்ந்து வரும் ஆன்றோர்களும், மீண்டும் மீண்டும் எண்ணி எண்ணிக் கற்கின்றனர். திளைக்கின்றனர்; பிறரையும் திளைக்கச்செய்கின்றனர். ‘படித்து முடித்து விட்டேன்' ‘மனனம் செய்து வைத்துவிட்டேன்' என்று அமைந்து விடுவது இல்லை. திருக்குறள் 'வாழ்வு நூலாக', 'உயிர்நதி' போன்ற, 'உயிர் நூ'லாக இருக்கும் காரணத்தால்!

கலை

கட்டாயம் செய்தாக வேண்டும் எனச் சில காரியங்கள் உள. அவற்றை எவரும் வற்புறுத்தாமலே செய்கின்றோம். நம்மை வற்புறுத்தாமலே உண்ணவில்லையா? பருக வில்லையா? வற்புறுத்துவோர் இல்லையே எனச் செய்யத் தவறுகின்றோமா?

கட்டாயம் செய்தே தீர வேண்டும் என்று சட்டங்களால் சில காரியங்களை வற்புறுத்தப் பெற்று இருக்கிறோம். அவற்றைத் தவறின் தண்டனை ஏற்க நேரிடும். அரசுக்கு வரி செலுத்தாமல் உழவர், நிலம் வைத்திருக்க முடியுமா?

கட்டாயப் படுத்தாமலே சில காரியங்களை நாமே விரும்பிச் செய்கின்றோம். இசை நிகழ்ச்சிக்கும், படக் காட்சிக்கும் நாடகத்திற்கும் பிறர் வற்புறுத்தாமலே போக வில்லையா? கலைகள் அனைத்தையும் விரும்பி நாமே தேடி அனுபவிக்கிறோம். க்கலையுள் ஒருவகைதான் இலக்கியக்கலை! இலக்கியச்