பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

இளங்குமரனார் தமிழ்வளம் - 9

பொது நலம் பேணிய நன் மக்கள் அவ்வக் காலங்களில் ஆங்காங்கு வாழ்ந்துளர். அவர்கள் மக்கள் நலங் கருதித்தாம் கண்டறிந்த நல்ல பல கொள்கைகளை உலகு அறிந்து நலமுறக் கூறியுள்ளனர்.

எவ்வளவோ துன்பங்கள் ஒருசேர எதிர் வந்து அவர்களைத் தாக்கியும், சிறிதும் அஞ்சாமல் கண்ட உண்மையைக் கடுகளவும் மறைக்காமல் கூறி வாழ்ந்து சென்றனர். அத்தகைய சீரியர் வழியில் சிந்தை ஒன்றிய நல்லன்பர்கள் ஒன்று சேர்ந்து, அச் சான்றோர் பெயரால் சில அமைப்புக்கள் ஏற்படுத்தியுள்ளனர். இத்தகைய அமைப்புக்களே சமயங்கள் மதங்கள் என்னும் பெயரால் இலங்கி இன்றும் ஆங்காங்கு கடனாற்றி வருகின்றன. சமயங்கள் அனைத்தும் மாந்தர்க்கு நலம் பயப்பனவற்றையே கூறுகின்றன என்றாலும், பின்பற்றுபவர்கள் சொல்லும் புதிய புதிய விளக்கங்களாலும், முரண்களாலும் நடைமுறைகளாலும் அச் சமயத்தினர் அன்றிப் பிற சமயத்தினர் மனம் புண்படவும், அது வளர்ந்து எதிர்ப்பாகவும், பகையாகவும் ஏற்பட்டு விடுகின்றன. இது மதங்களை உருவாக்கிய சான்றோர்களுக்கு உடன்பாடு அன்று என்றாலும், பின்பற்றிச் செல்பவர்களால் விளைந்துவிட்ட தீமையாகும். அதனால் நன்மை விளைக்குமாறே தோன்றிய சமயங்களும், ஓரொரு கால் தீமை விளைக்கும் இழி நிலைக்கு இறங்கிவிட்டதை, உலக வரலாற்றை ஒருமுறை சமய ஒருமை நோக்குபவரும் எளிதில் அறிவர்.

சமயப் பிணக்குடைய சில பேர்களை அழைத்து விருந்து வைத்தான் செல்வன் ஒருவன். விருந்து முடிந்தது; அதன் முடிவிலே அனைவருக்கும் பாயசம் வழங்கப் பெற்றபாத்திரங்களோ தங்கம், வெள்ளி, வெண்கலம், ஈயம், மண் இப்படிப் பலவாக இருந்தன. அச் செல்வன் விரும்பினால் அனைவருக்கும் தங்கப் பாத்திரமாகவே தந்திருக்கலாம்; அவ்வாறு தராமைக்குக் காரணமென்ன? என்று ருந்துக்குச் சென்றவர்கள் மயங்கினர். செல்வனிடம் வினவினர்.

அவன் சொன்னான்: சமயப் பிணக்கில் நீங்கள் உழல்கிறீர்கள். என் சமயம் உயர்ந்தது. நல்லது என்கிறீர்கள். உண்மை அது அன்று. சமயங்களுக்கு பெயர் வேறு. வேறாக இருக்கலாம். அதன் பயனும் தன்மையும் ஒன்றேதான். பாத்திரங்கள் பலவாக இருக்கின்றன. என்றாலும் அதனுள் இருக்கும் பாயசம் ஒன்றே. பாத்திரத்தைக் கண்டு மயங்குவது போலவே, சமயப் பெயரைக் கேட்ட அளவிலேயே மயங்குகின்றனர். உண்மையை ஆராய்ந்து