பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

இளங்குமரனார் தமிழ்வளம் - 9

பெருந்தேவனார். பலப்பல நூல்களில் தோய்ந்து நின்று முடிவறிந்த முடிவு இது!

தெளிவாக விளங்குதல் மட்டும் நூலின் சிறப்பு ஆகுமோ? ஆராயுந்தோறும், ஆராயுந்தோறும் புதுப் புதுக் கருத்துக்கள் தோன்றச் செய்து இன்புறுத்துதல் வேண்டும்; இப் பணியை இனிதாக நிறைவேற்றுகின்றது திருக்குறள். "நவில் தொறும் நூல்நயம்' போல என்றும், “கற்றனைத் தூறும் அறிவு” என்றும் கூறியுள்ள வள்ளுவனார் மொழிகட்கு அவர் நூலே சான்றாக விளங்குதலைக் கண்டார் உருத்திரசன்மர். அதனால், மணற் கிளைக்க நீர் ஊறுவதுபோல.

“வாய்மொழி வள்ளுவர் முப்பால் மதிப்புலவோர்க்கு ஆய்தொறும் ஊறும் அறிவு.”

என்கிறார்.

இத்தகைய சிறப்புடைய காரணத்தால் வள்ளுவர் நூலில் தோய்ந்தவர்கள் அதனை விட்டு விலக ஒருப்படுவது இல்லை.

66

'ஆரமுது உண்ணுதற்கு ஆசைகொண்டார் கள்ளில்

அறிவைச் செலுத்துவாரோ"

என்று பாரதியார் பாடுவது போன்று நாகன் தேவனார் பாடுகின்றார். எழில் மலர்ப் பொய்கையின் நறுமண நன்னீரில் இன்புறத் திளைத்து ஆடுபவர் வேறு நீரை விரும்புவரோ? வள்ளுவர் முப்பால் மொழியில் மூழ்கினார், பிறிதொன்றில் மூழ்குவரோ? என்று எண்ணிய அவர் எண்ணம்,

“தாளார் மலர்ப்பொய்கை தாம்குடைவார் தண்ணீரை வேளா தொழிதல் வியப்பன்று - வாளாதாம்

அப்பா லொருபாவை ஆய்பவோ வள்ளுவனார் முப்பால் மொழிமூழ்கு வார்.”

என்னும் பாட்டாக உருவெடுத்தது.

அறிவுக்கு விருந்து

வள்ளுவர் நூலை விடுத்துப் பிறிது நூலைத் தம் மனம் நாடாமைக்குரிய காரணத்தைக் காட்டுகின்றார் கொடி ஞாழன் மணிபூதனார் என்னும் புலவர். அழகுற, இறுமாப்புடன் பாடு கின்றார்.