பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

இளங்குமரனார் தமிழ்வளம் - 9

உயிர்கள் வாழ முடியுமா? ஆறறிவுடைய மக்கள் வாழ்வு நடைபெறுமா? ஆக அனைத்துக்கும் காரணமாக இருப்பது மழையே என்றால் அதன் சிறப்பை உணர்த்த வேறென்ன வேண்டும்?

மழையில்லையேல் உயிர்கள் தோன்றா; மழை சிறிது காலம் பெய்யாது பொய்த்தால் என்ன நிகழும்? நாட்டில் ஒழுக்கம் என்பது துளியளவும் இராது. நீரொழுக்கம் விண்ணி லிருந்து கிடைக்காவிட்டால் நல்லொழுக்கம் மண்ணில் தலை காட்டவே செய்யாது. இதனால்தான், “நாட்டை ஆள்வோர்களை அச்சுறுத்தக்கூடிய ஒன்று உண்டு; அது மழை வறண்டு போவதே' என்று பெரியோர்கள் உரைத்துள்ளனர்.

உயிர்களை உண்டாக்கி, வளர்த்து, ஒழுக்கமுடன் பேணி வரும் மழையின் சிறப்பை எப்படி உரைப்பது? மழையே அமிழ்து; அமிழ்தே மழை எனலாம்.

“வானின்று உலகம் வழங்கி வருதலால்

தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.'

த்திலிருந்து இவ்வுலகை மழை காத்து

வருகின்ற

காரணத்தால் அது அமிழ்தம் என்று உணரத்தக்கது ஆகும்.