பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. ஐந்து யானைகள்

ம்

முதிர்ந்து தளர்ந்த கிழவர் அவர்; முதுமையி லு உணர்ச்சியாக நடந்தார்; அவர் போகும் தெருவின் ஒரு புறத்தில் நிலம் அதிர நடக்கும் யானை ஒன்று ஓட்டமும் நடையுமாக வருகின்றது. அதன் மணி கேட்பவர்கள் துடிக்கும் வண்ணம் ஒலிக்கின்றது. காரணம், யானை மதங் கொண்டுவிட்டது. உணர்ச்சியின் எல்லை கடந்துவிட்ட யானையின் நடைக்கு எல்லை இருக்குமா? பாகன் ஏவலை மீறி அழிவு வேலையில் இறங்கிவிட்டது. தெருவில் பார்த்தவர்கள் பதைத்தனர்; திண்டாடி ஓடினர்; வீட்டு வாயிலிலும் முற்றத்திலும் நின்ற பெண்களும் பிள்ளைகளும் ஒளிந்தனர்! கிழவரால் ஓடித் தப்ப முடியவில்லை. யானையின் கையினுள் சிக்கிக் கொண்டார்!

வலிய யானையின் கையிலிருந்து மெலிந்த அக்கிழவர் விடுபடுவது எப்படி? எளிமையானதா? யானை கையில் இறுக்கிப் பற்றிக்கொண்டாலே போதும், மூச்சு இருக்காது கிழவருக்கு! காலின் கீழே அவரைப் போட்டு யானை மிதிக்குமானால்...?

ஓடிவந்தான் அருளாளன் ஒருவன்; அருள் இருந்தால் போதுமா? ஆண்மையும் அவனிடம் இருந்தது! அவன் கிழவனை யானைக் கையிலிருந்து விடுவிக்க ஒரு நொடிப் பொழுது எண்ணினான்: அடுத்த நொடியிலே யானைக் கையினுள் தான் நுழைந்தான்; கிழவனை விடுவித்தான். கிழவன் தப்பினான்; அவன் தப்ப வழி?

யானையின் கையை அழுத்தித் திணறவைத்துக் கொண்டே விரைந்து அதன் கையிலிருந்து விடுபட்டான்; கொம்பைப் பற்றிப் பிடித்து நெற்றி வழியே மேலே ஏறினான்; கருமலைமேல் எழுந்த கதிரவன் போல் காட்சி வழங்கினான்! அவ்வீரனைப் பாராட்டலாம் அல்லவா! “உயிர்தந்த உரவோன்" எனப்போற்றலாம் அல்லவா! அவ்வீரன் பெயரென்ன? 'கோவலன்' என்பது அவன் பெயர்! சிலப்பதிகாரம் என்னும் செந்தமிழ்க் காவியத் தலைவன் அவனே!

யானையை அடக்குவது எளிய செயலா? மாட்டைப் பிடித்து நிறுத்த-மஞ்சு விரட்டிலே-என்ன பாடு படுகின்றனர்.