பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

இளங்குமரனார் தமிழ்வளம் 9

ஆம்! அன்பு இல்லாதவன் குறிப்பிட்ட வேளையில் அன்பனாக நடிக்கலாம்! நடிக்கவும் கூடும். ஆனால் அன்பு உடையான் அன்பு இல்லானாக நடிக்க இயலாது.

இன்னல் அடையும் உயிரைக் கண்டு கரை புரண்டோடும் காட்டாற்று வெள்ளம்போல் தாவிச் செல்லும் அன்பைத் தடுப்பது எப்படி? தடுத்து நடிப்பது எப்படி? அன்பியல்பை உணர எல்லோர்க்கும் இயலுமோ? அன்புடையவர்க்கே அன்பின் இயல்பு அறிதற்கு இயலும். "பாம்பறியும் பாம்பின் கால்” என்பது பழமொழி:

“அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புண்கணீர் பூசல் தரும்."

99

(அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? இல்லை; அன்புடையார்க்கு அரும்பும் கண்ணீரே உள்ளே உள்ள அன்பைத் தெள்ளிதில் புலப்படுத்தும்.)