பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. பார்க்க வாடும் பனிப்பூ

நாம் வீட்டிலே இருப்பது எதற்காக?

நம் வீடு இருப்பது எதற்காக?

மனைவியொடும் மக்களொடும் வாழ்வது எதற்காக?

இக்கேள்விகளைக் கேட்டால் பலரும் பலவாறு விடை யளிப்பர். அவரவர் மனநிலை போலெல்லாம் விடைநிலை இருக்கும்!

பொருள் தேடுவது எதற்காக?

தேடிய பொருளைச் சேர்த்துவைப்பது எதற்காக? சேர்த்த பொருளைப் போற்றிக் காப்பது எதற்காக?

இக்கேள்விகளைக் கேட்டாலும் பலரிடமிருந்தும் பலவகை விடைகளை பெறக்கூடும்.

“என் கடன் பணிசெய்து கிடப்பதே” என்னும் அருளாளர் களும் உலகில் உளர். “என்பணி அரட்டை அடித்துத் திரிவதே” என அலமரும் ஆட்களும் உளர். இவ்விரு திறத்தார் விடைகளும் எப்படி ஒருசீராய் இருக்கக் கூடும்?

ரு

வீட்டில் இருப்பதும், நன்றாகச் செல்வம் தேடிக் காப்பதும் எனக்காக; என் மனைவிக்காக; என் மக்கட்காக; என் பேரருக்காக; என்பவர்கள் உலகில் மிகப்பலர். அவர்களைச் சின்னதோர் கடுகிலும் சிறுத்த இயல்பினர் எனக் கவிவாணர் இடித்து உரைப்பினும், அதுபற்றிக் கவலை எள்ளளவும் கொள்ளாராய் வாழ் நாளெல்லாம் பேயாய்ப் பாடுபட்டுத் திரிந்து. கோடி கோடியாகத் தேடியும் இறுதி மூச்சுவிடும் நேரத்தும் ஏற்பட்டதோர் அமைதியின்றி வெதும்பலொடு மடிகின்றனர். சிலரே, வீட்டில் இருந்து வாழ்வது எனக்காக அன்று; எக்களுக்காகவும் அன்று; 'பிறருக்காக' என்கின்றனர். எங்கள் வீட்டில் உலையேற்றுவது எங்களுக்காக அன்று; விருந்தினர்களைப் போற்றுவதற்காக என்கின்றனர். நாங்கள்