பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கட்டுரைகள்

41

போற்ற வேண்டும் என்னும் விழுமிய எண்ணத்தால் எழும் பியதே இச்சொற்கள் போலும்!

ஒவ்வொரு வீட்டிலும் பார்க்கலாமே. விருந்தினர் வந்தால் ஏற்படும் மகிழ்ச்சியை!

சிறுவர்களுக்குச் சுவையான சோறு, கறி, பாயசம், வடை கிடைக்கும் என்ற மகிழ்ச்சி! பெரியவர்களுக்கும் விருந்தாளியின் உவப்பையும் உறவையும் தேடிக்கொள்வதிலே மகிழ்ச்சி! கிழவர்கள் கிழவிகள் கூட, நல்ல பண்டங்கள் எல்லாம் கிடைக்கும், நாவுக்குச் சுவையானவையாகவே கிடைக்கும் என்ற ஆசையால் வீட்டுப் பொறுப்பு உடைய மகன் மகள் விருந்தினரைப் போக விட்டாலும் போகவிடாமல் வற்புறுத்தித் தடைபோடுவர். ஏன்? விருந்துச் சுவை தங்களுக்கும் உண்டு என்பதால் தானே!

"வந்த விருந்தினரைப் பேணுவதும், வர இருக்கும் விருந்தினரை எதிர்நோக்குவதும் இல் வாழ்வான் இயல்பு" என்பதைத் தமிழர் போற்றினர்.

"விருந்தாளிகளுக்குக் கதவு திறந்து வைத்திருப்பவனுக்கே மேலுலக வாயிற் கதவும் திறந்திருக்கும்" என்று புலவர் பலர் பாடினர். அதைப்போற்றி வாழ்ந்த இல்லறத்தார் தங்களுக்கெனக் கட்டிய வீடுகளின் முற்பகுதியிலே திண்ணை போட்டிருப்பர்;

முகில்