பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கட்டுரைகள்

49

பெறுவதையோ கருதியமையால் அன்று! இவை ஒரு சில செல்வக் குடும்ப வளர்ப்புப் பேறு நாய்கட்குக் கிட்டலாம். ஏழையர் குடிசைக் கூழிலா நாய்க்குக் கிட்டுமா? நாய் அடையும் உயர்வு, அதன் இயல்பான சிறந்த தன்மை ஒன்றைக் கொண்டேயாம். அந்த ஒன்றும், 'நன்றியுணர்வு' என்று போற்றப் பெறுவதேயாம்!

விலங்கினத்திற்கு அரிதான, மனித இனத்திலும் எளிதில் வாய்க்கப் பெறாத நன்றியுணர்வுச் செல்வம் நாயின் வழிவழிச் செல்வமாக வாய்த்து வருகின்றது எனின் அதனை ஆயிரம் ஆயிரம் முறை பாராட்டலாம் அல்லவா!

"யானை அனையவர் நட்பை அறவே ஒதுக்க வேண்டும்; னனில் யானை, உணவு தந்தும் உரிமை கொண்டாடி ப் பழகியும் உடன் உறைந்தும் இருந்தால் கூட சினங்கொண்ட பொழுதிலே பாகனையே கொல்லும்; ஆனால், நாயோ, தனக்கு ஒரு வேளை உணவு தந்தவன் கை வேலைத் தூக்கித் தன் உடலில் பாய்ச்சினாலும் வாலை ஆட்டிக்கொண்டிருக்கும்; யானையின் நன்றி மறந்த தன்மை இருந்தவாறு என்னே!" நாயின் நயமிக்க நன்றியுணர்வு இருந்தவாறு என்னே!" என்று புகழ்பவர்கள் உளரானால் நாய் நன்றியறிவால் பெற்ற பெருமை தானே!

உயிரோடு உளநாளிலும் நடைப்பிணமாய் இறக்கும் காலத்திலும் முடைப் பிணமாய் ஒழியும் நாய், இருந்தாலும் ஆயிரம் பொன் என்றும், இறந்தாலும் ஆயிரம் பொன் என்றும் போற்றப் பெறும் யானையினும் உயர்வு அடைவது எளிதா?

நாய்க்குப் பெருமை தரும் நன்றியுணர்வை நினைக்கும் வேளையில் மனிதன் நன்றியுணர்வையும் எண்ணவேண்டும். நாயின் நன்றியறிவுக்கு உயர்ந்து நிற்கின்றானா, ஆறறிவாம் பேரறிவும், உள வளர்ச்சியும், மொழித் திறமும் ஒருங்கு கொண்ட மாந்தன்? ஒப்பவேனும் நிற்கின்றானா-உயர்வு. இல்லாவிடினும்?

நன்றியறிதல் உடையோரும் உளர்; இல்லோரும் உளர்; ஒரே குடியில் வந்தோரில்கூட! ஒரு குலையிலேயே மணி நெல்லும், பாலடையாப் பதரும் உண்டு என்பதை அறிவோம் அன்றோ!

நன்றியறிதல் வேண்டுமா? எவருக்காக? எதற்காக?

நன்றியறிதல் இல்லையேல் உலகமே இல்லை; உயர்ந்தோரே இல்லை; ஆதலால் வேண்டும்; தனக்காகவும் வேண்டும்; பிறருக்காகவும் வேண்டும்.