பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 இளங்கோவின் சொல்லிச் சொல்லி விற்போர்கள் இடையிடையே கடை களில் எடுத் திருந்த விளக்குகள் வரிசையாகக் காட்சியளித் தன. பலவிதமான மீன்களே வகைப் படுத்தி விற்போர்கள் வைத் திருந்த விளக்கங்களும் அழகு செய்தன. குறுக்கே வலே போட்டு மீன்களைப் பிடிக்கும் பரதவர் கள் சிறு படகு களில் இட்ட விளக்குகள் அருமையான காட்சி தங்தன. பண்டங்களைப் பாதுகாப்போர் இட்ட விளக்கங்கள் கிறைய. உண்டு. வேறு மொழி பேசும் திசைகளி லிருந்து காவிரிப் பூம் பட்டினத்துக் கரையோரத்திற் குடியேறி யிருந்த: மக்கள் விடிவிளக்கு வைத்திருந்தனர். அவ் விடி விளக்கு களே 'ஒழியாவிளக்கு’ என்று இளங்கோவடிகள் கூறியுள் ளார். கடலிற் பிற பிற வரிசைகளிலிருந்து வந்து கொண் டிருக்கும் கப்பல்கள் திசை மாருமல்-கரை வந்து சேர்வ தற்கு உதவியாகக் கலங்கரை விளக்கம் இருந்தது: அவ் விளக்கு விட்டு விட்டு ஒளிர்வது. அதல்ை, கடலில் வந்து கொண்டிருக்கும்கப்பல்களை அழைப்பதுபோல அவ்விளக்கம் இருந்தது. அதனல், அது 'கலங்கரை விளக்கம்’ எனப் பெயர் பெற்றிருந்தது. இத&ன 'இலங்கு நீர் வரைப்பின் கலங்கரை விளக்கம்” என்று கவிஞர் கூறியுள்ளார். . இக் கவிஞர் ஒளியுடைப் பொருள்களிடத்தில்.ஈடுபாடு உடையவர் என்பது மாதவி பல்வேறு அணிகலன்களே அணி யலுற்ருள் என க கூறியிருக்கும் பகுதியிலிருந்தும் அறி. யப்படும். நல்ல மணமுள்ள பொருள்களெல்லாம் ஊறிய, கன்னிரில் தேய்த்த புழுகி&னக் கூந்தலில் இட்டுக்கொண்டு, கூந்தலே உலர்த்து தற்கு அகிற்புகையை மூட்டிக்கொண்டு, செவ்விய சீறடிகளிற் செம்பஞ்சுக் குழம்பைத் தீட்டிக் கொண்டு பல அணிகலன்களே மாதவி அணியலுற்றமை உரைக்கப்பட்டுள்ளது. அடிகளில் விரலணிகளேச் செருகிக் கொண்டு, பரியகம், நூபுரம், ஆடகம், சதங்கை, அரியகம் முதலியவற்றைக் காலுக்குப் பொருந்தும்படி அணிந்து கொண்டு, தொடைக் கேற்ற அணிகலன்களைத் தொடை பிற் செறித்து,முப்பத்திரண்டு வடத்தினுற் செய்யப்பட்ட