பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன் கவி 97 கொழித்த நாடு, இவ்வுயிர்கள் இவ்வாறு வாடி வதங்ஓ வருந்துகின்ற நாடாக இப்பொழுது மாறிவிட்டதே என்று அவர் கருதுகின்ற எண்ணமும் எவ்வாருே மாயமாக இப் பாடலிற் போய் ஒட்டிக்கொண்டுவிட்டன. பாடலினின்று இக்கருத்துக்களை ஒதுக்கிவிட இயலாது. பாடற்சொற்க ளோடும் பாடற் சொன்முறையோடும் இக்கருத்துக்கள் விளங்கும் வகையில் ஒன்றிக்கிடக்கின்றன."உயிர் உண்டே' என்று சொல்லிய பொழுது, தோன்றுகின்ற இரக்த்க் குறிப்பும் பிற குறிப்புக்களும், உயிர் உண்டு:என்று சொன்னல் கிடைக்க மாட்டா என்பது உறுதி; அதனுல், உயிர் உண்ட்ே என வரும் இடத்தில், உயிர் உண்டு: என்று பொருள் கூறி, "ஏகாரம் ஈற்றசை' என்று கூறி விளக்கம் செய்தால், நாம் வற்றல் உலகிற்கு வ்ந்துவிடு வோம். எச்சிலேயை ஒர்ப்பாய்ப் பொறுக்கும் உயிர் உண்டே என்று வரும் பகுதியிலுள்ள ஒவ்வொரு சொல்லேயும் படுத்தல், எடுத்தல், கலிதல் வேறுபாடுக ளுடன் உச்சரிக்க வேண்டிய விதத்தில் உச்சரித்தால், தோன்ற வேண்டிய உணர்ச்சி கட்டாயம் தோன்றும். அந்த உணர்ச்சி தோன்றும்படி கற்பிப்பதுதான் செய்யுள் ஆசிரியருடைய கடமை என்று இக்காலத்து மேட்ைடு அறிஞர்கள் மதிக்கிருர்கள், இக்கருத்து நம்நாட்டிலும் இப்போது பரவி வருகின்றது. சிலர் செய்யுட்களேச் சீர் நின்றவாறே படிக்க வேண்டு மென்றும், படிப்பிக்க வேண்டுமென்றும் கருதிக்கொண்டு, சில நேரங்களிற் பொருள் புலப்படாதவாறு செய்யுளைப் படித்துக் கடுமையாக்கி விடுகின்றனர். - "யாவர்க்கு மாமிறை வ்ற்கொரு பச்சிலை யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை யாவர் க்கு மாமுண்ணும் போதொரு கைப்பிடி யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே.”