பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 இளங்கோவின் என்று வரும் திருமந்திர ச் செய்யுளே ஆசிரியர் சிலர் மாமிறை, சாம்பசு, மாமுண்ணும், மாம்பிறர்க் கின்னுரை என்று படித்து மாணவர்களே அச்சுறுத்துவார் போல் ஆகிவிடுகின்றனர். சீர்ப் பகுதிகளைச் சிறிது பிரித்தது போலவும் பிரிக்காமல் விட்டது போலவும், பொருள் உணர்ச்சி தோன்றப் பாடுதலே தக்க முறையாகும். இப் பாடலின் பொருள் பொருந்துமாறு சீர் பி ரி க் காம ல் பிரித்துக் கற்பித்தல் கூடும் என்பதை ஆசிரியர் பலர் நன்கறிவர். பிறர்க்கு இன்னுரை என்று வந்துள்ள இடத்தில், கு ற் று க ச த் ைத எவ்வாறு உச்சரிக்க வேண்டுமோ அவ்வாறு உச்சரித்துக் கற்பிப்பதற்குமாருக, 'பிறர்க்-கின்னுரை' என்று பிரி த் துக் கூ றி ஞ ல் எவ்வளவு வெறுப்புணர்ச்சி உண்டாகிறது என்பதைக் கூர்ந்து கவனித்தல் நலம் பயக்கும். 'வசையொழிய வாழ்வாரே வாழ்வா ரிசையொழிய வாழ்வாரே வாழா தவர்'. என்னும் திருக்குறளைப் படிக்கும்பொழுது கடைசிச் சீர் 'மலர்' என்னும் வாய்பாட்டில் இருக்கவேண்டுமென்று கருதித் "தவர்' என்று அழுத்திப் படித்தல் ஒவ்வாது. "வாழ்வாரே வாழாதவர்' என்று சிறிது சேர்க்காதது போலவும் படிக்க வல்லுநரே சி ற ந் த ஆசிரியர்கள் என மதிக்கற்பாலர். கதை தாங்கிய செய்யுட்கள் பாடமாக வரும் வேளே களில், அதில் வரும் செய்யுட்பகுதிகளை விளங்கிக்கொள்ள வேண்டிய அளவிற்குச் சிறியதொரு முன்னுரை தருதல் கலம் பயக்கும். முன்னல் நிகழ்ந்துவிட்ட கதைச்செய்தியை ஒரளவு புலப்படுத்திவிட்டு நேரே பாடப் பகு தி க்கு ச் செல்லுதல் நல்லது. எனினும், பாடமாக அமைந்துள்ள செய்யுட் பகுதியின் உள்ளிருக்கும் கதையைக்கூட ஒரளவு சுட்டிக்காட்டுவது தவருக மாட்டாது. ஒவ்வோர் அடியிலே யும் வரக்கூடிய முழுக்கதையையும் சேர்த்துச் சொல்லி