பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீரர் கவித்திறன் நெற்றிக்கண்ணேக் காட்டினும் கு ற் ற ம் குற்றமே என்ற தமிழ்ப் பெருமகனர் நக்கீரர் என்று தமிழ் மக்கள் அறிந்துள்ள அளவு அவருடைய செய்யுட்களின் திறனே அறிந்திலர் என்று கூறுவது புனேந்துரை ஆகமாட்டாது. நக்கீரர் திருமுருகாற்றுப்படையேயன்றியும் நெடு நல் வர்டை போன்ற அரிய தொடர்கிலச் செய்யுட்களே இயற்றியவர் என்பதையும், அகநானூறு, புர்கானூறு, கற்றிகண, குறுந்தொகை முதலிய தொகை நூல்க்ளில் வ்ரும் அருமையான செய்யுட்கள் சிலவற்றின் ஆசிரியர் என்பதையும் இன்னும் பலர் அறிந்துகொள்ளவில்லை. காரணம் நக்கீசருடைய நயமுடைச் செய்யுட்கள் எளிய கடையில் யாவர் க்கும் விளங்கக்கூடிய முறையில் அதிக மாக எடுத்து விளக்கப்படாமையே ஆகும். நக்கீரர் இக்காலப் பொதுவுடைமையர் கருத்தை யொத்த கருத்தின ஆயிரத்தெண்ணுறு ஆண்டுகளுக்கு முன்னரே இயம்பிவிட்டார். உலகில் மக்களாய்ப் பிறந்தார் எல்லாம் ஒத்தவர்கள் என்ற கருத்தினேயும் அவரவருக்கு இயன்ற வகையில் ஒவ்வொருவரும் உழைக்க வேண்டு மென்பதையும், அ. வர வ ரு ைடய தே ைவ க் கே ற் ப ஒவ்வொருவருக்கும் பொருள்கள் கிடைக்கப் பெறுதல் வேண்டுமென்பதையும் நக்கீசர் அன்றே அறிந்திருந்தார். பேரரசு நடாத்திய பெருமையுடையோருக்கும் உ ற க்க மின்றித் தொழிலே உன்னிப்போடு செய்த தொழிலாள ருக்கும் உண்பதற்கு நாழி அரிசியும் உடுப்பதற்கு இரண்டு உடுக்கையும் தானே தேவை எ ன க் கேட்டார் அவர். மற்றன எல்லாம் ஒக்குமல்லவோ என்ருர். நாமே அனைத் தையும் தின்று உடுத்தித் துய்த்து மகிழ்வோம் என்று