பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன் கவி 1 0 1 உள்ளவர்கள் உலகில் இழக்கின்றவை பல வல்ல வோ என்ருர். இக்காகத் து அவர் பாடிய புறநானூற்றுப் பாடல் ஒன்றி ற் காணப்படுகிறது. த லேவி ஒருத்தி, த லேவனப் பிரிந்திருந்த வேளையில் ஏற்பட்ட பசலேகோப் விரைவில் நீங்கத் தக்கதே என்ற கருத் தினே அவர் .ெ த ரி வி க்க முற்பட்ட குறுந்தொகைச் செய்யுள் ஒன்றில், கடமை உணர்ந்தவனுடைய செல்வம்போல அவள் பச8ல நோய் தங்குதற்குரியதன்று எனக் குறிப்பிட்டார். கடமையை உண்ர்ந்தவன் தன் உடைமையைத் தானும் துய்த்துப் பிறருக்கும் பயன்படுத்துவிான். ஆதலால், தன்'செல்வப் பொருளைப் புரள விடுவான் என்பதும், அது காரணமாகப் பணம் அவன் கையைவிட்டு நீங்கும் என்பதும், அவன் கையைவிட்டுப் பணம் நீங்குதலைப்போல அவளது நோயும் நீங்கிவிடும் என்பதும் அவரால் அங்கே குறிக்கப்பட்டவை. அவர்காலத்தில் வாழ்ந்த மக்களது செல்வச் செழிப் பி&னயும் அவர் சிற்சில பாடல்களில் உணர்த்தியுள்ளார்: எடுத்துக்காட்டாக அகநானுர் ற்றில் வரும் பாடல்களைக் குறிப்பிட்ல்ாம்.அச்செய்யுட்களில் ஒன்றனுள் அவர், பாண் ம்கள் ஒருத்தியைப்பற்றிய சொல்லோவியம் தந்துள்ளார். அவள் தன்னுட்ைய தந்தையார் காலே கோத்திற் பிடித்து வந்து தந்த பெரிய கொம்பிகனயுடைய வாளே மீன விற்கச் செல்கிருள் என்றும், விற்ற வகையில் கிடைக்க வேண்டிய பணத்தைப் பெருந்தொகையாக்கிப் பெறுகிருள் என்றும் அவர் கூறியுள்ள க ருத் தி லி ரு ந் து பல்வேறு இனக் கருத்துக்கள். கிளேக்கின்றன. அவளோ அழகிய சொற் களேச் சொல்லும் பாண்மகள். அவள் தெருவே செல்லும் போது அவள் உந்தி தெரியும்படி ஆடை சரிந்துகிடக்கிறது. அவ்வுந்தியின் அழகிலிருந்து அவள் அழகின ஒர்ந்து கொள்ளுதல் கூடும். அவள் செல்லும் தெருவோ நீண்ட கொடிகள் அசையும் பெரிய தெரு. அந்தத் தெருவில் கள் விற்போர் நிறைய உண்டு. அந்தத் தெ ரு வழியே