பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 இளங்கோவின் செல்கிறவள் வாளை மீனே விற்றுக் கள் அளக் கொள்ள விரும்பாமல் மேலே கடந்து செல்கிருள் என்ற குறிப்புப், பாட்டின்கண் உள்ளது. அத்தெருவில் ப ைழ ய செந்' நெல்லேக் குவித்து நிறைய வைத்திருப்பவர்கள் உண்டு. அவர்களிடம் வாளைமீனவிற்று நெல்லேத் தன் அன்றையத் தேவைக்கு என வாங்காமல் திரும்புகிருள் என்ற குறிப்பும் இங்கே இருக்கி றது. அதல்ை அவள் இயல்பாகவே செல்வம் ஒரளவுடைய குடி ஒன்றினைச் சார்ந்தவள் என்ப தும், அன்றன்றையத் தேவைக்கு நெல்லேப் பெற்று வர வேண்டிய கிலேயில் உள்ளவள் அல் ல ள் எ ன் ப து ம் குறிப்பிக்கப்படுகின்றன. இவற்றிற்குமாருக அவள் அரும் பெறல் முத்துக்களைப் பெற்றுத் திரும்புகிருள். ஒவ்வொரு முத்தின் விலையோ அதிகம். எனினும், ஒரு முத்தைப் பெறு தற்குரிய அளவி வா8ள மீனை ஒரே வீட்டிற் சேர்த்துச் சேர்த்துக் கொடுத்துப் பணத்தை நிறுத்தி வைத்திருக் கிருள் ஆதலால், சில நாட்கள் கழித்துப் பிற்பாடு முத்துக் ஒளோடு,நல்லு,அணிகலன்களைப் பெறக் கூடிய அளவில் இசழிப்புச் சிெப்புக்கூடியவாறு தகுதியும் மனவுறுதியும் அவள் உடையவள் என்பது எத்துணே நயம்படக் கவிஞர் நக்கீராற் காட்டப்பட்டுள்ளதென்பது அடியில் வரும் அகநானூற்றுப் பகுதியால் தெரியவரும்: “... ... ... ... தன்ஐயர் காலைத் தந்த கணக்கோட்டு வாளைக்கு அவ்வாங்கு உந்தி அஞ்சொற் பாண்மகள் நெடுங்கொடி நுடங்கும் நறவுமலி மறுகிற் பழஞ்செந் நெல்லின் முக்வை கொள்ளாள் கழங்குறழ் முத்தமொடு கன்கலம் பெறுஉம் பயங்கெழு வைப்பு ... ... ... ' சில சொற்களாற் பல அரிய கருத்துக்களைப் பெருங் கவிஞர்கள் அமைத்துத் தந்துவிடுவார்கள் என்பதன் உண்மை இப்பாடற் பகுதியால் நன்கு விளங்குகிறது,