பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன் கவி 103 'அவ்வாங்கு உந்தி அஞ்சொற் பாண்மகள்' என்ற சில சொற்களால் ஓர் அழகிய, தேனூறும் சொல் பேசுகின்ற ஒரு வடிவத்தை நம் கண் முன்னே உருவாக்கிவிட்டார். "நெடுங்கொடி முடங்கும் மறுகு' என்றமையால் இன் னின்ன பொருள் இந்த இந்தக் கடையில் விற்கப்படுகிறது என்பதை விளக்கிக்காட்டும் பெருந்தெரு ஒன்றனுள் அவள் செல்கிறள் என்பது குறிக்கப்பட்டுள்ளது. 'கறவு மறுகில்' என்றமையால் பலர் தாளாற்றிய பொருள் கொண்டு கள் குடித்துச் சென் ருர்கள் ஆக, அவள் உரநெஞ்சுடன் அக் கடைகளுள் எதனையும் எட்டிப்பாராமல் நெடுக ச்சென்ருள் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. ‘பழஞ் செங் நெல்லின் முகவை கொள்ளாள்' என்று கூறிய வகையால் நகர மாந்தரின் செல்வச் செழிப்பும் பற்ருக்குறையின்மையும் எடுத்து இயம்பப்பட்டது. கழங்கிகன ஒத்த ஆணிமுத்துக் களையும் கல்ல அணிகலன்களேயும் அவள் பெறக்கூடிய அளவு பயன் நிரம்பிய ஊர் அது என்பதை எவ்வளவு இனிமையாக இப்பகுதியினுள் இக்கவிஞர் மொழிந்துள் ளார் என்பதை கினைத்து நினைத்து இன்புறுதல்கூடும். அக்கால மக்கள் எதற்காக உடலுழைப்பு உடையவர் களாக இருந்தார்கள் என்பதை இவர் ஒரு பாட்டில் விளக்கி உள்ளதை நாம் இன்றும் கண்டு பின்பற்றிச் செயலாற்றுதல் கூடும். 'ஒருவர் தொழிலைச் செய்வது எதற்காக? உறவினர்கள் வறு ைம உடையவர்களாய் இருப்பின், அவர்களுடைய வறுமையைப் போக்கி அவர் களைத் தாங்கும் பொருட்டும், உற்ருர் உறவினர் குடும்பத் தார் அனைவரும் வயிரு ர உண்ணும்பொருட்டும், நட்பும் பகையும் கொள்ளாமல் நொதுமலராய் உள்ளவர்களைத் தன்வயப்படுத்தி நண்பர்களாக ஆக்கிக் கொள் ளு ம் பொருட்டும் ஒருவர் பொருள் ஈட்டும் முயற்சியில் ஈடுபட வேண்டும்' என்ற கருத்தினை அகநானூற்றுச் செய்யுள் ஒன்றனுள் அமைத்து இவர் பாடியுள்ளார். ،۔ ۔ ۔ساب -