பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104. இளங்கோவின் அப்பாட்டினுள் த லேவி ஒருத்தியது நெற்றியின் மணத் திற்கு உவமையாக அவள் கூறியதொன்று நினேக்கத் தக்கது. பகல் அங்க டி பின் நறுமணம்போல அவள் துதல் ம ண ம் இருந்த தென்று குறிப்பிட்டுள்ளார். பாண்டிய மன்னனுடைய மதுரையம்பதியிலுள்ள நாளங்காடியின் நறுமணம்போல அவள் கெற் றியின் விரை உள்ளது என்று கூறியிருப்பதுகொண்டு எவ்வளவு துப்புர வாக அங்காடி வீதியை அக்காலத் தமிழக மக்கள் பேணினர் என்பது ஏண்ணத்தக்கது. த8லவி வேருெ ருத்தியைப்பற்றி இவர் வேருெரு அக நானு ற்று ப் பாடலிற் பேசியுள்ளார். அவள் செல்வத் தாய் வீட்டில் திருமணம் செய்து கொள்ள விரும்பாமல் ஆலவனுடைய சிறிய ஊரில் அமைந்த சிறுகுடிலிற் போய்ப் பொருந்திய செய்தியை நிகனங்து கூறுகின்ற செவிலித் தாயது கூற்றுப்போன்று அமைந்த அகநானூற்றுச் செய்யு 'ளில், அவளுடைய தலைவன் வறியவன் எனினும் இவனேப் பெறுதற்கு உரிய பெருந்தகுதி உடையவள் என்பதைப் புலப்படுத்தி, சிறப்பும் சீரும் சிற்றுர் பெற்றிராவிட்டா லும், அவளோடு பொருங்திய உழுவல் உள்ளத்தை புடைய அத்தலேமகனுக்கு அவள் பொருந்தியவள் என்பதைப் புல ப் படு த் தி உள்ளார். த8லவியினுடைய தாய்வீடு செல்வம் கொழிக்கும் வீடு ஆயினும், அங்குத் தங்க விரும் பாமல் தலேவி புல் வேயப்பட்ட த லேவனுடைய சிறுகுடிசை யில் வாழ்வதையே பெரிதாக மதித்தாள் என்பதையும் புலப்படுத்தியுள்ளார். ஒற்றைத் து னேயுடைய முற்றத் தோடு கூடிய வீடு அது: ஒரே ஒரு பசு கட்டப்பட்டுள்ள வீடு அது பெரும்பொருள்கள் இல்லாத வறுமனே அது. ஆயினும், அவ் வீட்டினுள்ளே உறைவிடமாகக் கொள்வ தற்கு மகிழ்ச்சிகொண்டாள் அத்த லேவி என்பதை அழகு ற அச்செய் புள் காட்டுகின்றது. அத்தலேவி தலைவனுடைய வீடு செல்லுதற் குமுன் வருந்தி இருந்ததொரு நேரத்தில்