பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன் கவி 109 குட்டுவன் மக்கள் நலனுக்காக ஆட்சியை மேற்கொண் டிருப்பதால், அரசாட்சி இன் பவுல கன்று என்று கருதின்ை. மக்களுக்குத் தன்னலும், தனது பரிசனத்தாலும், விலங்கு களாலும், பிறவற்ருலும் தீமைகள்கிகழாத வண்ணம் ஆட்சி செய்ய வேண்டுமென்றும், தீமைகள் நிகழ்ந்தால் அவற்றை நீக்கு தற்குத் தக்க வழிகள் காண எப்பொழுதும் முற்பட்டுக் கொண்டேயிருக்க வேண்டுமென்றும் அவன் கருதினமை யால், மற்றையோர் துரங்கும் அளவு கூடத் துரங்காமல் விழித்திருந்து ஆள வேண்டியிருப்பதால், ஆட்சி என்பது தொழத் தக்கதன்று என்றும், துன்பமேயுடையதென்றும் அவன் கருதின்ை என்பது சிலப்பதிகாரத்தால் த்ெளிவா கிறது. புறநானூற்றிலும் புலவரொருவர், அரசன் ஆள்வது குடிமக்கள் நன்மைக்கே என்று கூறினர். "உனது வெண் குடை வெயில் மறைப்பதற்காக உனக்குப் பிடிக்கப்படுவ தன்று- மக்களைக் காப்பாற்றுதலின் அறிகுறியாகவன்ருே பிடிக்கப்பட்டிருக்கிறது' என்று அவர் கூறினர். அரசாட்சி செய்வோருக்கு அஞ்சாமையும், ஈகையும், அறிவும், ஊக்கமும் குறையாமலிருக்க வேண்டுமென்ருர் திருவள்ளுவர். கல்வியுடையவராயும், துணிவுடையராயும், விழிப்புடையராயும் அரசாள்பவர் இருக்கவேண்டுமென் ருர். மக்கள் தத்தங் குறைகளே வ ந் து தெரிவித்துக் கொள்வதற்குரிய வாய்ப்புக்களையும், வ ச திக ளே யும் ஆள்வோர் த ரு த ல் வேண்டுமென்றும், வெடுவெடுத்த சொல்லும் கடுகடுத்த முகமும் உடையராக ஆள்வோர் இருத்தல் ஆகாது என்றும் அவர் விரும்பினர். வறிய மக்களுக்கு ஈத்தளிக்க வல்லவர்களாகவும், இன் சொல் இயம்புபவர்களாகவும் அரசாள்வோர் இருத்தல் வேண்டு மென்ருர். மக்களிடமிருந்து வரிவசூல் செய்யும்பொழுது அவர்கள் எநத அளவிற்கு வரிகளேச் சுமையாகக்கருதாமல் கொடுத்தல் இயலும் என்பதைக் கண் ட றி ங் து அர