பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன் கவி 1 13 'செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு ' என்ற குறளினால் ஊகிக்கப்படும். - - தம் கட்சியிலுள்ள அனைவரையுங் கலந்து கொண்டு செயல்களாற்ற வேண்டுமென்று ஆள் வோ ைரத் திரு வள்ளுவர் எதிர்பார்த்தார் என்பது, சீறிற் சிறுகுந் திரு' என்ற திருக்குறளினல் தெளிவாகும். அரசாள்வோர் பிழைசெய்பவர்களைத் தண்டித்தல் வேண்டுமென்ருல், அவரவர் செய்த குற்றத்திற்கு ஏற்புத் தண்டனை எது என்று சட்டத்தோடு காடி அறிந்து மீண்டும் அத்தகைய குற்றத்தை அவர்வர் செய்யலாகாது என்று தடுக்கும் வகையில் மாத்திரம் தண்டனை கொடுக்கப்பட வேண்டுமெனத் திருவள்ளுவர் விரும்பினர். இது, "தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங் கொறுப்பது வேந்து' என்ற குறளினல் விளங்கும்."ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி' எனப் புறநானூற்றிலுங் கூறப்பட்டுள்ளது. குற்றம் செய் தோரைத் திருத்தி மீண்டும் சமுதாயத்தில் தக்க உறுப் பினர்களாக வாழ வகை செய்வது தான் அரசாட்சியின் நோக்கமாக இருக்கவேண்டும். ஆனல், செய்த குற்றம் கொலக் குற்றம் போன்று கொடியதாக இருப்பின், அக் குற்றஞ் செய்வோரைத் தூக்கிலிட்டுத் தண்டித்தல் அர் சாள்வோர் கடமையென்பதை வள்ளுவர் வகுத்துள்ளார். 'கொலேயிற் கொடியாரைக் (.ெ கா லே யி ன ல்) வேந் தொறுத்தல் பைங்கூழ் களே கட்டதைெடு நேர்' என்ற குறட்ப வால் இது விளங்கும். செய்த குற் றம் சிறிதா வும், கொடுக்கப்படும் தண்டனை பெரிதாகவும் இருத்தல்