பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 இளங்கோவின் பெற்ருேரும் தவறிலர்........... அரசனே தவறுடையவன்' எனப் பேசுவது ஒக்குமா? குற்றமுடையவன் என அவ8ளப் பற்றிக் கூற அவனுக்குத் துணி வில்லை. அவளுடைய பெற் ருே ரைக் குற்றம் உடையவரென்று சொன்னல் அது காரண மாக அவளது பகை விளேயுமெனக் கருதிச் சொல்லக் கூசு கிருன். 'அமர்வரின் அஞ்சேன் நுமர்வரின் மறைகுவன்' (நற்றி அண 362) என்று கூறுபவர் மரபில் வரும் இவன் இப்படித்தானே பேசுவான்? தான் மாத்திரம் தவறு டை யவன் அல்லன் என்பதுதான் அவனுடைய எண்ணம். யார் மீதாவது பழிபோட வேண்டுமென்றும் அவ்வாறு பழி போடுவதால் அப்பெண்ணிற்குத் துயரம் உண்டாகக்கூடா தென்றும், ஒருவேளை அவள். இரக்கங் காட்டுவாளாயின் அவ் விரக்க டணர்ச்சியை எழுப்பிவிட வேண்டுமென்றும் கருதிய அவன் எவரோ ஒருவர்மீது பழிசுமத்துவான்போல அங்கில்லாத அச்சொற்களைக் கேளாத அரசன் மீது பழி சுமத்தினன். இங்கே தன் குற்றத்தை நொதுமலர்மீது ஏற்ற விழைந்த ஒருவனைப்பற்றிய செய்தி, காணப்படுகிறது. கோவ ல ன் மாதவியோடு உறவாடிக் குன்றமன்ன பெரும் பொருளை இழந்து கண்ணகியோடு புகார் நகரத்தி லிருந்து மதுரைக்கேகி அங்கு வாணிகஞ் செய்து இழந்த பொருளே மீட்டுப் பெறச் கருதினன். மதரையின் புறஞ் சேரியிற் கண்ணகியோடும் கவுந்தியடிகளோடும் போய்த் தங்கியிருந்க வேளையி ற் கெளசிகன் என்பான் மாதவியிட மிருந்து ஒரு முடங்கல் கொண்டுவந்து அவனிடம் தந்தான். மாதவி முன்னரே மாலைவழிச் செய்தியொன்றை வசந்த மாலையிடம் கொடுத்துக் கோவலனைத் தன்பால் மீட்டும் பெறுதற்கு முயன்ருள். அதனைப் புறக்கணித்துவிட்டான் கோவலன். இச்செய்தி வேனிற் காதையிற் கூறப்பட்டுள் ளது. இப்பொழுது கெளசிகன் கொண்டுவந்த முடங்கலில், 'அடிகள் முன்னர் யாண்டி வீழ்ந்தேன் வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும்