இன் கவி 12 1 குரவர்பணி யன்றியுங் குலப்பிறப் பாட்டியோடு இரவிடைக் கழிதற்கு என்பிழைப்பு அறியாது கையறு நெஞ்சங் கடியல் வேண்டும் பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி" என மாதவி எழுதியிருந்தாள். தந்தையார் கட்டளையை நிறைவேற்றுதறகாக அல்லாமலும் எவர்க்குஞ் சொல்லிக் கொள்ளாமலும் கண்ணகியோடு புகார் நகரத்தை விட்டுக் கோவலன் நீங்கிச் சென்றமைக்கு யாது காரணம்: “ஒரு வேளே என் தவருக இருக்குமோ? அத்தவறு யாது என் அறிய மாட்டாமல் செயலற்றுப் போகிறது என் நெஞ்சம்' இதனைத் தாங்கள் நீக்குத்ல் வேண்டும்" என்று க்ோவல்கன நோக்கி எழுதப்பட்ட இம்முடங்கலே அவள் எழுதியதைப் படித்துண்ர்ந்து, “மாதவி தீதிலள், நானே தீதுடையேன்", என்று கோவலன் கருதினன் எனச் சிலப்பதிகாரம் கூறு கிறது. கோவலன் மாதவியிடம் சென்று உறைந்தது தன் குற்றமே என உணர்கிருன். அதனால் புகார்நகரத்தைவிட்டு இர விடை நீங்கிவருதற்கு மா த வி குற்றஞ் செய்திலள் என்றும் தன் குற்றத்தாலேயே தான் அப்பதியைவிட்டு நீங்கவேண்டி ஏற்பட்டதென்றும் அவன் கருதுகின்றமை யின் ‘தன் திதிலள் எனத் தளர்ச்சிங்ேகி என் தீது என்றே எழுதியதை உணர்ந்தான்' எனக் கவிஞர் கூறியுள்ளார். இந்திர விழா நாளில் மாதவியோடு கடலகம் புகுந்து கானல் வரிப் பாடல்கள் இசைத்து, அங்கு நிகழ்ந்த ஊடலின்பின் கூடாது வீடேகின்ை கோவலன்; கண்ணகியிடம், "யாவும் சலம்புணர் கொள்கைச் சலதியொடு ஆடி குலந்தரு வான்பொருட் குன்றந் தொலைந்த இலம்பாடு காணுத் தரும்எனக்கு' எனக் கூறினன். கூறிய பொழுது மாதவியைப் பொய்த்தி என ஏசினன். ஏசிய அவன், பிறகு "அவள் தீதிலள் புகாரைவிட்டு நீங்கி வந்தது என் தீதே ' என ஒப்புக்
பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/124
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை