பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன் கவி 1 2 3 அடாது. அடுத்து, தான் என்றும் அவைேடு ஒன்றிய வாழ்க்கையுடையவள் என்ப ைத த் தெளிவுபடுத் திக் கூறி விட்ட வகையால், தான் கூறிய சிறு கடுஞ்சொல் இன்சொல் லாகக் கொள்ளத்தக்கது என்ற குறிப்பினேயும் உ ட ன் வைத்து அவள் பேசிய திறமை பாராட்டத்தக்கது. பாண்டிய மன்னன் தன் தேவியின் சிலம்பினைக் கவர்ந்து கொண்டவன், கோவலன் எனத் தவருக உணர்ந்தான். தேவியின் சிலம்பு பொற்கொல்லளு ற் கவர்ந்து கொள்ளப் பட்டது. அக் குற்றத்தைக் கோவலன் மீது ஏற்றிப் பொற் கொல்லன் அரசன நம்புமாறு செய்துவிட்டான். அரசனும் ஆடல் பாடல் நிகழ்ந்த மண்டபத்தினின்று நீங்கி அரசியின் ஊடலைத் தணிப்பதற்காக விரைவிற்சென்றுகொண்டிருப். பவன் காக்குழறி "கொன்றச் சிலம்பு கொணர்க' எனக்கூறி விட்டான். கொல்லச் சிலம்பு கொணர்க எனக் கூறக் கருதியவன் - கூற வேண்டியவன் - கொன்றச் சி லம்பு கொணர்க என அவசரத்திற் கூறிவிட்டான். அது காரண் மாகக் கோவலனும் வெட்டுண்டு மாய்ந்தான். "கள்வனக் கொல்லுதல் கடுங்கோலன்று. வெள்வேல் கொற்றங்காண்' எனக் கண்ணகியிடம் வீறு பேசிய பாண்டியன் கண்ணகி யின் சிலம்பு வேறு, அரசியின் சிலம்பு வேறு என்பதையும், கோவலன் கையில் இருந்த கண் ண கி யி ன் சிலம்பில் மாணிக்கப் பரல்கள் இருந்ததென்பதையும் அறிந்தவுடன், அவன் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டு உயிரை உடனே விட்டான். விண்ட மணியைக் கண்டவுடன் பதைபதைத்து 'யானே அரசன்! யானே கள்வன்!” எனக்கூறி மயங்கிவீழ்ந்து அம்மன்னன் தான் செய்த குற்றத்திற்காகக் குலேவு ற்று நடுங்கியமை சிலப்பதிகாரம் எடுத்துக்காட்டும் தென்னவர் மாண்பு. கோவலனே க் கள் வன் என்ற தன் வாயாலேயே, 'தவறு செய்யாத கோவலனுடைய சிலம்பைக் கவர்ந்து கொண்ட நானே கள்வன்' என்று அவன் ஒட்புக்கொண்ட பெருந்த கைமை உலகமுள்ள அளவும் போற்றப்படும்.