பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 இளங்கோவின் சிலர் முன்னுல் ஒரு தீச்செயலைச் செய்து விட்டுச் செய்ததற்காக இரங்குதல் பெருமையின்பாற் படுமா யினும், அடிக்கடி ஒவ்வா த தைச்செய்துவிட்டுச் செய்தேனே செய்தேனே என இரங்குதல் ஆ காது. திருவள்ளுவா, ‘எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றன்ன செய்யாமை கன்று” - என்ரு ர். தீயதைச் செய்யாமலிருப்பது கடினமாயினும், கடினமான ஒன்றை நிறைவேற்றுபவரே பெரியவராதலின் செய்திரங்கா வினையுடையார்போற்றப்படுபவர்.அவ்வாறு செய்திரங்காவினையுட்ையபுகழ்மிக்க சோழன் ஒருவன், ஊன் பொதி பசுங்குடையார் என்னும் புலவராற் பாராட்டப்பட் டுள்ளான். அப்பாட்டு, புறநானு ற்றில் வருகிறது. சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி தானே'நேரில் ஆராய்ந்து ஒருவரிடத்துக் குற்றங் கண்டால் அத்னை நீதிநூற்கேற்ப ஆராய்ந்து அவர் செய்த குற்றத்திற்கேற்பத் தண்டனை கொடுப்பான் எனப் பாராட்டப்ப்ட்டுள்ளான். ெேமய் கண்ட தீமை காணின் ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி' என்னும் அடிகளே நோக்குக.அரசன் தன் குற்றத்தை நீக்கிப் பிறர் குற்றத்தைக் கண்டு தண்டிக்க வல்லவனைல் அவன் குறை கூறப்படமாட்டான் என்பதுதான் திருவள்ளுவர் கருத்து. தன் குற்றத்தை நீக்கி விட்டால் பிறர் குற்றங் காரணமாகத் தண்டித்தல் முறைசெய்தல் என்றே பேசப் படும். திருவள்ளுவரும் 'ஒறுப்பது வேந்து' என்ருர். குற்றத் திற்கு ஒத்த தண்டனையையும் குற்றத்தின் மிகாத தண்டனை யையும் அளிப்பவன் வேந்தன் என்ருர். ஒப்ப நாடி என்று ஊன் பொதி பசுங்கு டையார் பேசியது, தக்காங்கு நாடி’ எனத் திருவள்ளுவரால் மொழியப்பட்டுள்ளது. அரசன் நடுநிலைமையோடு ஆ ய வேண்டுமென்பதுதான் இதற்ை பெறப்படுவது. -