பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன் கவி I25 தகாததொன்றைச்செய்துவிட்டால் அதற்காகக் கவல் கின்ற மனம் பெரிய மனம். பாண்டியமன்னன் ஒருவன் வார்த் திகன் என்பானைத் தன் ஏவலாளர்கள் தக்க காரணமின் றி ச் சிறைப்படுத்தியமைக்காக வருந்தியுரைத்து அவன் அடி களில் வீழ்ந்து வணங்கினன் என்று சிலப்பதிகாரஞ் செப்பு கிறது.பராசரன் என்பான் ஒருவனல் பரிசிலாகத்தரப்பட்ட பல பொன் அணிகலன்களை வார்த் திகன் குடும்பத்தார் பூண்டுகொண்டதைப் பொருமல் படுபொருள் வெஃகியவன் என அவன் மீது அண்டைவீட்டார் ஏறிட்டுக்கூற, அரசன் ஏவலர்கள் அவனை உடன் சிறையிட்டார்கள். அதனே யறிந்து கலங்கிய பாண்டியன், கார்த்திகைகணவன்வார்த், திகன் தாளில் வீழ்ந்து, செய்ததற்கு இரங்கி வேண்டினன் என்று கட்டுரை காதை கூறுகிறது. - ர்ேத்தன் றிதுவென நெடுமொழி கூறி அறியா மாக்களின் முறைகிலை திரிந்தவ்ென் இறைமுறை பிழைத்தது பொறுத்தல் நுங்கடன்' என்று கூறி அவரை வார்த்திகன் வணங்கின்ை என்பதைக் கவிஞர் அழகுபட உரைத்தார். "இருகில மடங்தைக்குத் திருமார்பு கல்கி அவள் தணியர் வேட்கையுஞ் சிறிது தணித் தனனே' என்று வரைந்த பொழுது கிலத்தின்மீது மன்னவன். வீழ்ந்து வணங்கின்ை என்ற குறிப்பு அழகுறத் தீட்டப் பட்டுள்ளது. பூமடந்தைக்கு அரசன் திருமார்பு கல்கினன் என்ருல் தண்டனிட்டான் எ ன் ப து கருத்து. நெடு நேரம் நிலத்தின்மீது கிடக்காமல் எழுந்துவிட்டான் என்ப தைக் குறிப்பாகத் தெரிவிக்கிற கவிஞர், அவள் வேட்கை யைச் சிறிது தணித்தனன் என்ருர். மன்னவன் இவ்வாறு பன்முறை தவறிழைத் துப் பலர் காலில் வீழ்ந்து மன்னிப் புக் கேட்டானல்லன் என்பதைத் தெரிவிப்பான்வேண்டி கிலமகளது தணியாத வேட்கையைத் தணித்தனன் என்ற வகையால் குறிப்பிட்டார். அவன் மார்பு தம்மீதுபொருந்த வேண் டுமென மணமகள் பல்லாண்டுகளாகத் தவங்கிடக்