பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.26 இளங்கோவின் தனள் போலும்! அவளுடைய தணியாத அவ்விருப்பத் தைச் சிறிது நிறைவேற்றின்ை பாண்டியன். 'சிறிது நேரம் பூமியிற் பொருந்து மாறு படிந்து' என்ற வகையால் மொழியப்பட்டுள்ள இடத்தின்கண் கவிநயம் சிந்திக்கத் தக்கது. - - - - பண்புடையவர்கள் பொதுவாக ந ல் ல தே செய்ய வேண்டுமென்பதை விழைவதும் அல்லது செய்வதற்கு நானுவதும் உலகியல். தவறென்று ஒருவர் இழைக்கிற் பொழுதுகூடத் தம் மீது தவறில்லை எனச் சமாதானஞ் செய்துகொண்டு செல்கின்ற மரபினையொட்டிய வகையில் கண்ண்கி தன் இடக்கொங்கையைத் திருகிவிட்டு மதுரைக் குத் தீயிட்ட பொழுது,

யானமர் காதலன் தன்னைத் தவறிழைத்த கோநகர் சீறினேன் குற்றமிலேன் யான்'

எனக் கூறினள். மதுரைக்குத் தீயிடுவது குற்றங் தான். என்பதை ஒரளவு கண்ணகி உணர்ந்து, என்னுடைய கணவ லுக்குக் குற்றமிழைத்த இவ்வூரைச் சிறினேன்-ஆதலால் ர்ேன் குற்றமிலேன் என்த் தனக்குள் கூறிக்கொண்டமை குற்றஞ் செய்வதன்கண் உள்ள மக்களது வெறுப்பினப் பொதுவாகக் காட்டும். அந்த அளவு பழிக்கும் பாவத்திற் கும் அஞ்சக்கூடிய மனப்பான்மையுடையவர்கள் தமிழ் மக்கள் என்பது இதல்ை தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. ஒர் ஊரில் பருவம் எய்திக்கொண்டிருந்த பெண்மகள் ஒருத்தியை அவள் தாய் வெளியேபோகாதே என அடிக்குடி கூறிக்கொண்டிருந்தாள். தந்தையும் அப்பெண் வெளியே செல்லுதலேப் பொருத வய்ை “உன் சிறிய அடிகள் சிவக் கும்படி - மகளே ஏன் வெளியே போகிருய்' எனக் கேட்டுக் கொண்டிருந்தான். இச்செய்தியைப் பற்றி அ ப் பெண் கூறியதுபோல அகநானூற்றுப் பாடல் ஒன்றில் கபிலர் கூறியுள்ளார். அவ்வடிகள் வருமாறு: