பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 இளங்கோவின் உண்மை புறநானு ற்றில் வரும் சில செய்திகளாலும் வலி யுறுகிறது. மூவன் என்னும் சிற்றரசன் ஒருவன் பெருந்தலைச் சாத்தனருக்குப் பரிசில் கொடுக்கத் தயங்கி அவரோடு தனி யிருக்கையில் அமர்ந்து அவரை ஓரளவு குறைவாகப் பேசி விட்டான்.அவர் “எேன்னிடஞ்செய்த இவ்வன்பின்மையை இந்த ஆசன மன்றி வேறெவரும் அறியாதிருக்கட்டும்' என்று கூறினர். அரசன் புலவர்களை இகழ்ந்தான் என்ற பேச்சே வரக்கூடாதென்பது அவரது விழுமிய நோக்கம். “என்னை இகழ்ந்தது காரணமாக் உனக்கு கோய் எதுவும் வாராமல் இருப்பதாக' என அவர் வாழ்த்தியே சென்ருர் என அறிகிருேம்.அச்செய்யுட்பகுதி வருமாறு: "கசைதர வந்துகின் னிசைநுவல் பரிசிலேன் வறுவியேன் பெயர்கோ! வாள்மேம் படுக! ஈயா யாயினும் இரங்குவேன் அல்லேன் நோயிலை யாகுமதி பெரும . கம்முட் குறுநணி காண்குவ தாக......இருக்கையே' வல்விலோரி என்னுங் குறுமன்னனைக் கழைதின் யானையார் என்னும் புலவ்ர் ஒருநாட் கண்டு. அவன் பரிசில் நிறையத் தராததற்காக அவனவையாமல் வாழ்த்திச் சென்ருரென அறிகிருேம். வள்ளல்களிடத்திற் பலர் வந்து ப்ெர்ருள் பெற விழைவார்களென்பது அவருக்குத் தெரியும். பொருள் கிறைய இருந்தும் கொடாதவர் வீடுநோக்கர்து பொருள் குறைந்த காலத்திலும் விரும்பிக் கொடுப்பாரை நோக்கியே பலர் வருவர் என்பதும் அவருக்குத் தெரியும்.தான்செல்லு, முன் "வள்ள லிடத்தில் எத்தனை பேர் சென்று எவ்வளவு எவ்வளவு பெற்றுக்கொண்டு சென்ருர்களோ என்றும், ஒருவேளை இ ன் று எனக்குக் கொடுக்கமாட்டாமையின் கொடுத்திலன் போலும்' என்றும் தாமே அமைவு கண்டு கொண்டார் புலவர். அதனால், 'உண்ணிர் மருங்கின் அதர் பல வாகும் புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை