பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 இளங்கோவின் புனக்கதிர்களே உண்பதற்காக விரும்பி வந்த யானே துரங்கி விட்டது. தூங்கு தற்குக் காரணமாக இருந்தனவோ இம் மகளிருடைய பாடல்கள்: புனத்தைக் காத்துக் கொண் டிருந்த காவலர் யான வராமல் விழித்திருந்து கவண் கல்லே உடைத்திருந்தால் ஒருவேளை யான புனத்தினுள்ளே நுழைந்திராது. ஆனல் கானவனே மூங்கிலில் விளையும் கள் ளே மாந்திவிட்டான். ஆதலால் காவலிற் சோர்ந்து விட் ட்ான். யானையோ வந்து விட்டது. அது புனக் கதிர்களைத் தின்றிருக்கும். தின்னமற் பாதுகாத்தவை குறத்தியரு டைய பாட்டுக்கள் என்று அழகு பெற இக்கவிஞர் அமைத்து, இப் பாட்டுக்களின் ஒசையைக் கூர்ந்து கேட் டுக் கொண்டிருந்தாள் கோப்பெருந்தேவி என இயைபு படுத்திக் காட்டியுள்ள அழகு போற்றுக் தகையது. மருத நிலத்தில் ஏருழவர்கள் 'காளை நம் அரசனது பிறர் த க்ாள். மாற்றரசனுடைய அடித் தளை யை நீக்கும் கன்னுள் அது. நம் அரசன் போரில் வென்று திரும்பி வந் தான். ஆதலால், பகடுகளே! நீங்கள் நாளே நுகத்திற் பூட்டப்படமர்ட்டீர்கள். உங்களுக்கு விடுமுறை” என்று தெரிவிப்பது போல அமைந்த பாடலே உழவர்கள் பாடிக் கொண்டிருப்ப, அப்பாட்டின் ஒசையைக் கேட்டிருந்தாள் கோப்பெருந்தேவி என்ருர். முல்லே நிலத்திலுள்ள கோவலர்கள் குழலே ஊதி ஒலிக் கும் ஒலியினே க் கூற எடுத்துக்கொண்ட கவிஞர் பொருகை யாற்றுத் துறையில் தாழைக் கோட்டின் மீது இருந்து கொண்டு கோவலர்கள் குழல் இசைக்கிரு.ர்கள் என் ருர். வண்ணமும் சுண்ணமும் மலர்களும் பரந்து இந்திர வில் போலப் பல கிறக் காட்சி அளிக்கும் பெருங் துறை அது என் ருர். தாழைக் கோட்டு மீது அமர்ந்திருந்த ஆயர்கள் குவ ளே யையும் தாமரை யையும் த லேயிலே முடித்திருந்தார்கள் என்று கூறினர். அவர்கள் அரசன் வெற்றியோடு மீண்ட தைப் பாராட்டிப் பரவியவர்களே,