பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 6 இளங்கோவின் இயங்கலும் இயங்கும் மயங்கலும் மயங்கும் ஆரஞர் உற்ற வீர பத்தினி' என்று கூறினர். தவறிழைத் த பாண்டிய அரசன் முன்னிலேயில் நேரே சென்று தன்னுடைய சிலம்பில் மாணிக்கப்பரல் உண் டென்று எடுத்துக் காட்டிக் கணவன் குற்றமில்லாதவன் என்பதை நிறுவித் தவறிழைத்த பாண்டியன் வாயி லிருந்தே கோவலன் குற்றமில்லாதவன், நானே கள் வன்’ என்ற சொற்களை வருவித்து உண்மையை உலகறிய வைத்த உத்தமியானதாற் கண்ணகி பொருவறு பத்தினி எனப் பேசப்பட்டுள்ளாள். இப்பத்தினியின் திறத்தை எதிர்நோக்கிப் பாராட்டிய முதன்மை சாலினி என்ற வேட்டுவ மகளுக்குரியது. இவளைப் பற்றி அவள் உரைத்த பொழுது,

இவளோ கொங்கச் செல்வி குட்மலையாட்டி தென்றமிழ்ப் பாவை செய்தவக் கொழுந்து ஒருமா மணியாய் உலகிற் கோங்கிய திருமாமணி" என்றுரைத்தாள். இவ்வுலகிற்கு முழுமாணிக்கம் போன்று ஏற்றம் பெற்றுப் பெண்ணுருக் கொண்ட பெரு மாமணி யாகக் கண்ணகி மதிக்கப்பட்டாள் என்பது இதல்ை அறி யப்படும். இனி வரப் போவதை உணர்ந்து முன் கூட்டியே சாலினி தெய்வமுற்ற தன்மையால் இவ்வாறு பேசிள்ை. இவ்விடத்திற் கண்ணகியைக் கொங்கச் செல்வி என்றும், குடமலையாட்டி என்றும் கூறியுள்ளமை நோக்கத் தக்கது. இப்பகுதிக்கு உரை எழுதிய அரும்பதவுரைகாரர்,

மேற்பட்டு இவளைத் தெய்வமாகக் கொண்டாடுமிடங் கூறினபடியாலே' 'இவள் துர்க் கையாகவே சேரநாட்டி ற் பிறந்தாளென் றவாறு’ எனக் குறிப்பிட்டார். பிறகு கண்ணகி தெய்வ மாகக் கொண்டாடப்பட இருப்பதை உணர்ந்து சாமி