பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன் ஏவி 35 'அறிவறை போகிய பொறியறு கெஞ்சத்து இறைமுறை பிழைத்தோன் வாயி லோயே!” என்று அரசனுடைய வாயிற் காவலனை கோக்கிக் கண்ணகி பேசிளுள். 'அறிவு கெட்டுப்போன அரசனது வாயிற்காவ லனே' என்றும். கோல் கோடிவிட்ட அரசனது வாயிற் காவலனே!' என்றும் கண்ணகி துணிவுடன் பேசிள்ை.என். :பது இச்சொற்ருெடர்களால் அறியப்படும்.அரசனே கேரிற் கண்ட பிற்பாடும் தேரா மன்ன!" என்றும் ஆற்றும் படராக் கொற்கை வேந்தே' என்றும் அவள் ப்ேகதிற்குத் துணிவு தந்தது, அவளது அறவுணர்வேயாகும். அவள் அறமுடைமையால் உரம்பெற்றுப் பேசப்பேச, மன்னவன் அ ற ச் சோர் விஞ ல் தாழ்ந்து தாழ்ந்து உரைக்கும் பணிவுடையவனப் வீழ்க்திறந்தான், அவன்” பணி வு கண்ணகியின் வெற்றி. அதல்ைதான். "சிலம்பின் வென்ற சேயிழை கங்கை , கொங்கைப் பூசல் கொடிதோ அன்று' என்றும். தேரா மன்னனச் சிலம்பின் வென்று இவ்வூர்தி யூட்டிய ஒருமகள்' என்றும் மதுரை மகளிர் பேசிக்கொண்டார்கள் என் அழற்படு காதையின் இறுதியில் கவிஞர் கூறியுள்ளார். மேலும். சேர நாட்டு மகளிர் கண்ணகியைப் பாவிப் போற்றியதாக வரும் வாழ்த்துக் காதைப் பகுதியில், " ... ... ... ... கோவேங்தைச் - செஞ்சிலம்பால் வென்ருளைப் பாடுதும் வம்மெல்லாம்' என வஞ்சி மகளிர் கூவியழைத்ததாகக் கவிஞர் உரைத் துள்ளார்.