பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதவியின் கானற் பாணி மாதவியின் கான ற் பாடல் கனகவிசயர் என்ற ஆரிய மன்னருடைய முடித்தலேயை கெரித்தது என்று ஒரு நாள் ஒருவர் சேரன் செங்குட்டுவனிடம் சொல்லிக்கொண்டிருந் தார். உண்மையில், சேரன் செங்குட்டுவன்தான் கனகன் விசயன் ஆகிய இருவரை அடக்கி அவர் முடித்த ஆலயில் கண்ணகிக்குப் படிவம் சமைப்பதற்குரிய கல்லினை ஏற்றிக் கொண்டுவந்தவன். எ னினும், அவன் முன் னி &ல யி ல் மாடலன் என்ற மறையவன் இவ்வாறு ஒருநாள் பகர்ந்தது செங்குட்டுவனுக்கு வியப்பாகவே இருந்தது. "வாழ்க எங்கோ மாதவி மடங்தை கானற் பாணி கனக விசயர்தம் முடித்தலை நெரித்தது முதுநீர் ஞாலம் அடிப்படுத் திாண்ட அரசே வாழ்க’ என்று மாடலன் கூறியதைக் கேட்டு மன்னனுக்கு வியூப் புண்டாகாமல் எவ்வாறு தான் இருக்க முடியும்? அதனல், இதுவரையில் யாரும் இவ்வாறு கூற நான் கேட்டதில்லை, மாற்றரசர் கூட இவ்வாறு கூருர், ர்ே வந்து இவ்வாறு கூறியதன் காரணம் என்ன? இது நகைக்கக்கூடியதாக இருக்கி ற தே' என்று மாடல&ன கோக்கி மன்னவன் மொழிந்தாகை, அவனும் உரைக்கலுற்ருன். "முன்புஒருநாள் இந்திர விழா நாளிலே கடல்விளையாட் டிற்காகக் கோவலனும் மாதவியும் சென்றிருந்தபொழுது மாதவி பாடியதொரு பாட்டால் கோவலன் அவளே விட்டுப் பிரிந்து,கூடாது வீடு திரும்பின்ை.அவ்வூடலுக்குக்காரணம் ஊழ்வினை போலும் மாதவியைப் பிரிந்து தன் குலக்கொடி கண்ணகியொடு மதுரைக்கு ஏகினவன் கொல்லப்பட்டான்.