பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங் கோவின் இன் கவி இளங்கே வடிகள் கண்ணகியின் தந்தை யையும் கோ வலனுடைய தந்தையையும் அறிமுகப்படுத்துவதில் ஒர் அழகு உண்டு. கண்ணகியின் த நதை யை 'மாக வான் நிகர் வண் கை மாநாய்கன்’ என்று அறிமுகப்படுத்திய அவர், கோவலன் தந்தையை உயர்ந்தோங்கு செல்வத்தான்’ என்றும், 'வருநிதி பிறர் க்கு ஆர்த்தும் மாசாத்துவான்’ என்றும், இரு நிதிக்கிழவன்’ என்றும் அறமுகப்படுத்தி யுள்ளார். மாநாய்கன் மிக்க வன்மை உடையவன் என்று காட்டிய அவர் அவைேடொத்த வன்மை யுடையவன் ம்ா சாத் துவான் ஆயினும், தன்னலே சட்டப்பட்ட நிதியைப் பிறர்க்கு எடுத்து வழங்குபவன் என்ற குறிப்பினே அழகு பட அமைத்துள்ளார். மேகத்தையொத்த வன்மையுடை யவகை இருத்தற்கு, கைம்மாறு கருதாமற் பிறர்க்கு வழங்குவதற்கு மாநாய்கன் பெருஞ் செல்வமுடையவனுக இருந்த மை போல, மாசாத் துவானும் முன்னரே தாயப் பொருளாகப் பெருநிதியைப் பெற்றிருந்தான், என்ற செய்தி 'இரு நிதிக்கிழவன்’ என்பதால் உணர்த்தப் பட் டது. தன் தந்தையாரும் மூதாதையாரும் தி ரட்டி வைத் துப் போன பொருளுக்குரியவன் மாசாத்து வான் என்பது 'இரு நிதிக்கிழவன் என்பதால் , சொல்லப்பட்டது. உயர்ந் தோங்குகின்ற செல்வத்தை உடையவன், உயர்ந்து ஒங் கக் கூடிய செல்வத்தை உடையவன் அவன் என்பது “உயர்ந்தோங்கு செல்வத் தான்’ என்பதால் கூறப் பட் டது. மென்மேல் தன்னல் சட்டப்பட்டு வருகின்ற நிதியி னே த் தான் பிறர் க்கு அவன் மகிழ்ந்து அளித்தான் என்ப தும், மூதாதையர் வைத் துப்போன பொருளேத் தன்பின் வருவோர்க்கு விட்டுப்போகக் கருதின்ை மாசாத்துவான் என்பதும் மிகமிக அழகாகச் சொல்லப்பட்டுள்ளன .