பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவலன் கலையார்வலன் சிலப்பதிகாரக் காப்பியத்தின் த லேவ கை அமைக் துள்ள கோவலனேக் கலையுலகத்தைப்பொறுத்த வரையில் தன்னேரில்லாத தலைவன் என்று கூறுதல் கூடும். அவன் பிறர் துயரம் கண்டு தாங்கமாட்டாத அளவு ஈர உள்ளம் படைத்தவன். வறியோர்க்கும் உரியோர்க்கும் வழங்கும் பெருங்குடியிற் பிறந்து அக்குடிப் பண்பு மாருது அவ் வண்ணமே வாழ்ந்து வந்தவன். இன்னலுற்ருர்க்கு அவன் இரங்கித்செயலற்ற்றுழ்வழியின் குறுக்கேய்ர்வ்ர்வரினும் நீர்க்கு இடுக்iேச்சல்தின் செயல்முந்துப் iெறும் எனில் இடுக்கண் விகிாப்பதற்குக் கூசாத்வன் என்பது சிலப்பதிகார்,அடைக்கலக் காதையால் அறிய வருகிறது. கோவலனுடைய இத்தகைய உயர்குணங் க அளக் கவிஞர் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்திற் பதினேந்தாவது காதையாகிய அடைக்கலக் கா ைத யில்தான் தெரிவிக்கிரு.ர். அவனுடைய மாண்பு அக்கா ைத் யாலும் அதற் கடுத்தக்காதையாகிய்; கொலைக்களக் காதை யாலும் நன்கு வெளிப்படுகிறது. கோவலனுடைய குடும்ப வாழ்க்கை முதலிற் கவின் பெற உருவாகியுள்ளது என்பது மனேயறம்படுத்த காதை யிற் காட்டப்பட்டுள்ளது. திருமகளை ஒத்த உருவழகியாகிய கண்ணகிக்கும் முருகவேளை ஒத்த அழகினளுகிய கோவல னுக்குந்திருமணம் நடந்தபிற்பாடு, இவ்விருவரும் இன்பத் தில் திளை த்து மிக்க மகிழ்ச்சி எய்தினர் என்பது மனையறம் படுத்த காதையில் அழகாகமொழியப்பட்டுள்ளது. பெருங் கவிஞராகிய இளங்கோவடிகள் இவ்விருவர் பெற்ற சிற் றின்பத்தை நயக்கத்தக்க நாகரிகத்தொடு விரித்துரைத் துள்ளார். கோவலனும் கண்ணகியும் நிலா முற்றத்திற் சென்று தங்கிய காட்சி சூரியனும் சந்திரனும் ஒருங்கே