பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 இளங்கோவின் கோவலன் மடிந்தான் என்ற செய்தி கேட்டுத் தன் வழி வருவோர் யாவரும் இல்லேயே என ஏங்கி அறங்கள் பல இயற்றித் துறந்தான் மாசாத்து வான் என்பது சிலப் பதிகாரத்தின் பிற்பகுதியில் சொல்லப்பட்டுள்ளது. 'கோவலன் தன்னைக் குறுமகன் கோளிழைப்பக் காவலன் தன்னுயிர் நீத்ததுதான் கேட்டேங்கிச் சர்வதுதான் வாழ்வென்று த்ானம் பலசெய்து மாசாத்து வான்துறவும் கேட்டாயோ அன்னை மாகாய்கன் தன் துறவும் கேட்டாயோ அன்னை' எனக் காவற்பெண்டு அர ற் றியதாக ஒரு பகுதி 'வாழ்த் துக் காதை"யில் வருகிறது. இதல்ை ஊகிக்கத் தக்கது கண்ணகியின் தந்தை மாகாய்கன் தன் முயற்சியால் ஈட் டிய பொருள் முன்னரே பிறர்க்குக் கொடுத்துத் தீர்ந்து விட்ட் படியால் இப்பொழுது தானம் பல் செய்யாமல் அவன் துறந்துவிட்டான் என்பது போலும்: கண்ணகிக்கும் கோவலனுக்கும் திருமணம் நடந்த ர்ளில் அவ்விட்த்தில் கூடி வாழ்த்திய மக்களப் பற்றி இங்கோவடிகள் வருணித்திருப்பதில் மிக்க நயமுண்டு. திருமண் வீட்டிற் பூவும் புகையும் சாந்தும் சுண்ணமும் இளக்கும்கலமும் இருந்தன என்று வருணிப்பது இயல்பு. இவ்வாறு ஒருவர் எழுதுவது உரைநடை. இதனேயே 'வின்ாயினர் மலரினர் உரையினர் பாட்டினர், விளக்கி னர்.கலத்தினர் விரித்த பாலிகை முளைக்குட் கிரையினர்' என ஒருவர் எழுதுவது செய்யுள். ஆனல், விரையினர் மலரினர் விளங்கு மேனியர் உரையினர் பாட்டினர் ஒசிந்த நோக்கினர் சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர் ஏந்திள............. இடித்த சுண்ணத்தர் விளக்கினர் கலத்தினர் விரிந்த பாலிகை முளைக்குட கிரையினர் முகிழ்த்த மூரலர் போதொடு விரிகூந்தற் பொலனறுங் கொடியன்னர்'