பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன் கவி 6 : அதனேக் கரந்து வரல்எழினி’ என்பது மரபு. அத்திரை வழி யாக விண்ணவர்கள் வந்திறங்குவது போன்ற காட்சிகள் அமைத்தல் இயலும். இ ைவயே அல்லாமல் 'ஓவிய விதானம்' எனப் பெயர்கொண்ட மேற்கட்டி கட்டப்படுவ துண்டு. அதில் அழகியபடங்கள் வரையப்பட்டிருக்கும். அப் படங்கள் ஒவியக் கலேயின் வளர்ச்சிக்கு வழிகாட்டிகளாக் வும், மக்கள் உள்ளத்தை மகிழ்விக்க வல்லனவாகவும் அமைந்திருந்தன என்பது அறியப்படுகிறது. வாரப்பாடல் பாடப்பட்டதும், குயிலுவக்கருவிகள் கூடி இசைக்கும். இக்கூட்ட இசையை இக்காலத்தில் "ஆர்க்கெச்ட்ரா (orchestra) என்கின்றனர். நல்ல ஆடி லரங்கங்களில் புல்லாங்குழலின் இசையைத் தழு வி யாழிசை அமைவதுண்டென்பதும், யாழிசைக்கேற்ப் மத்தள இசை அமைவதுண்டு என்பதும், அதன் பின்வழிக் குடமுழா ஒலிப்பதுண்டு எ ன் பதும், குடமுழாவொடு ஆமந்திரிகை என்னும் இடக்கைக்கருவியோசை கூடிகின்று இசைப்பதுண்டென்பதும் வரிசையாக அரங்கேற்று காதையிற் கூறப்பட்டுள்ளன. . . * * கின்று ஆடுதலே ‘கிலே' என்றும், கீழே விழுந்து ஆடுத அலப் 'படிதம்' என்றும் கூறுவது அக்காலத்திய மரபு. கின் ருடல்களும் வீழ்ந்தாடல்களும் ஆகிய ஆடல்களிற் பதினே ராடல்கள் சிறப்பாக எடுத்தோதப்பட்டுள்ளன. அவற்றுள், திருமால்ஆடல்களாக மூன்றும், சிவன் ஆடல்களாக இரண் டும், முருகன் ஆடல்களாக இரண்டும், திருமகள், துர்க்கை, இந்திராணி, காமன் ஆகிய இவர்களுடைய ஆடல்களாக ஒவ்வொன்றும் கூறப்பட்டுள்ளன. இவற்றைச் சேர்த்துப் பதினேராடல்கள் என்பது வழக்கம். திருமால் ஆடிய ஆடல்கள் அல்லியத் தொகுதி, மல்லா டல், குடம் என்பன. கண்ணனுடையமாமன் கம்சன் செய்த வஞ்சனேகளே வெல்லுதற்காகக் கண்ணபிரான் ஆடியப்ல ஆடல்களுள் அல்லியத் தொகுதி ஒன்று. கம்சன் வஞ்சனே