பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பிற் பரதவர் சிலப்பதிகாரத்திற் கடலோரக் காட்சிகள் ,பல இடங் களில் வருணிக்கப்பட்டுள்ளன. .ெ வ ள் எளிய அ லே கள் பொருத, கடலோர வெண் முத்தினிடத்துக் குண்டுகுண் டாக உள்ள நீர் டைகரைகளிலுள்ள புன்னே மரங்களின் காட்சிகள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. அக்கரையோரங் களில் வலம்புரி ஈன்ற நல்ல முத்துக்களே ம க ளி ர்கள் கழங்குபோற் கொண்டு விளயாடுகின்ற காட்சி நீர்ப் படைக் காதையில் வருணிக்கப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்தில் வரும் பரதவர்களைப் ப ற் றி ய் செய்திகளை அறிய வேண்டுவோர் சிற்ப்பாகக் கானல் வரியை நோக்குவார்கள். 'கானல் வரி' என்ற த லேப்பில் இந்துள்ள பாடல்கள் இனிக்கும் இசையமுதம். கடலோர்த் தில் வாழும் மாந்தர்கள் கள்ளங்கபடமற்ற உள்ளத்தின ரிாய் வாழ்பவர்கள் என்பது விளக்கப்பட்டுள்ளது. கட் லோரத்திலுள்ள ஆம்பல் சங்கு வளையல்களையும், வெள்ளே முத்துக்களையும் பார்த்துக் கட்டவிழ்கின்றன. பொதுவாக், வெண்மதியத்தையும், ஒளியுடைய உடுக்களையுங் கண்டு ஆம்பல் கட்டவிழ்வது உண்டு. ஆனால், புகார் நகரக் கட லோரத்திலுள்ள ஆம்பல்கள் மகளிருடைய கைகளிலுள்ள சங்குகளையும் வெண் முத்துக்களையும் பார்தது, வளையல் களே வெண்மதியம் எனக் கொண்டு மயங்கியும், முத்துக்களை வான்மீன்கள் எனக்கொண்டும்யங்கியும் பொதியவிழ்ந்தன என்று இளங்கோவடிகள் வருணித்துள்ளார். இதிலுள்ள குறிப்பு, பரதவர்கள் வஞ்சனே அறியாத வெள்ளை மன முடையவர்கள் என்பது. காள்தோறும் விடியும் முன், பெரிய ஆபத்துக்களுக்கு உள்ளாகக் கூடிய கடலிற் கட்டுமரங்களேயும், திமில்களேயும்