பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன் கவி 3 இச்செய்யுளேப் பாடிய பாரியின் மகளிர் இருவரும் தம் முடைய தந்தை யைச் சென்ற திங்களிற்பெற்றிருந்த தளுல் அடைந்த பெருமையையும் ஏமாப்பினேயும் முதலிற் குறிப் பிட்டார். அவர்களுடைய குன்றம் தம்வயம் இருந்தது பற்றி அடுத்த அளவில்தான் அவர்களுக்கு மகிழ்ச்சி இருந் தது. தந்தையையும் குன்றத்தினேயும் ஒப்பிட்டுப்பார்க்கும் பொழுது குன்றத்தை இழந்து தங்தையைப் பெற்றிருந் தால்கூடத் துயரம். உற் றிருக்க மாட்டார்கள். அவர்கள் பேசுகிற அந்த நிலவு நேரத்தில் “குன்றம் போயிற்றே எம் தந்தையும் இல்லையே' என்றவாறு கலங்கினர் என இப் பாடலினல் அறிகிருேம். எங்கள். நாடு போயிற்று, எங்கள் தந்தையாவது இ ரு ந் தி ருக்கக் கூடாதா எனக்கருதி அவர்கள் பேசியிருக்கிரு.ர்கள் என்பது “குன்றும் கொண் டார்' என முதலில் வைத்து 'எம் தந்தையும் இலம்ே' எனப் பின்னர் வைத்துப் பேசினமையால் அறியப்படும் இரக்கவுணர்ச்சியைத் தூண்டிவிடத்தக்க உலகச் செய்யுட் சளில் இப் புறநானூற்றுச் செய்யுளுக்குச் சிறந்ததோர் இடமுண்டு. அவ்வாறே, இரக்கவுணர்ச்சியைத் தூண்டி விடக் கூடியனவாய்க் சில பகுதிகள் சிலப்பதிகாரத்திற் காணப்படுகின்றன. கண்ணகி பாண்டிய மன்னனே எதிர் நோக்கி, ‘வாழ்தல்வேண்டி நின்னகர்ப்புகுந்த என்கணவன் உன்ற்ை கொல்லப்பட்டனனே!' எனக் கூறி, ‘வாழ்வு விரும்பினவன் சாவு பெற்ருன்' எனத் தெரிவிக்குமிடத் திற் பெரியதோர் இரக்கம் எழுதல் இயல்பு. கோவலன் வெட்டுண்டு கிடந்தவனக் காணவந்த கண்ணகியைத் தான் காணுளுய்க் கோவலன் கிடந்த நிலையில் அவள் பாடிய பாட்டு உருக்கத்தின் உயர்ந்த எல்லேக்குச் செல்லுகிறது. 'வண்டார் இருங்குஞ்சி மாலைதன் வார்குழன் மேற் கொண்டாள் தழீஇக் கொழுநன்பாற் காலேவாய்ப் புண்டாழ் குருதி புறஞ்சோர மாலைவாய்க் கண்டாள் அவன்றன்னைக் காணுக் கடுந்துயரம்'